Posts

Showing posts from March, 2018

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்

Image
தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வாழ்தல் என்பது இயலாத காரியம்.அந்த உபகாரம் பொருள் சார்ந்ததாகவோ , இல்லை அதிகாரம் சம்பத்தப்பட்டதாகவோ இருக்கலாம்.ஏராளமான சமூக உதவிகளை இலவசமாகப் பெற்றுக் கொழித்தவர்கள் ; உதவிகளின் பொருட்டு எளிய எழுத்தாளர்கள் மீது அவதூறுகளை பகிரங்கமாக்குவது சுய பரிசீலனை அற்றது.புறம்போக்கு நிலம் அத்தனையையும் பட்டாமாற்றி வைத்திருப்பவன் ;எள்ளுருண்டை வாங்கித் தின்றவன் மேல் குற்றச்சாட்டுகளை நீதிமான் தோரணையில் சொல்வதற்கு ஈடானது.வெட்கக்கேடானது.இதுபோன்ற விஷயங்களை ஒருபோதும் எழுதக் கூடாது என்பதே என்னுடைய பொதுவான எண்ணம்.ஆனால் எழுத வேண்டிய சூழ்நிலையை சூழல் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.ஏனெனில் ஏராளமான பேர்களின் உதவிகளால் உருக்கொண்டது எனது வாழ்க்கை. தமிழ்ச் சமூகம் ஒருபோதும் எழுத்தாளனுக்கும் ,கலைஞர்களுக்கும் செய்கிற உதவிகளை கணக்கில் கொண்டிருப்பதில்லை.கணக்கு பார்ப்பதில்லை.செய்த உதவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அவனுக்கு கட்டளைகள் இடுவதுமில்லை.வெளியில் தம்பட்டம் அடிப்பதில்

நாகர்கோயிலில் ராமனைப் பார்த்தேன்

Image
நாகர்கோயிலில் ராமனைப் பார்த்தேன் வணக்கம் தெரிவித்தேன்.அவன் வெகுவாகக் களைத்திருப்பதைப் போன்று தோன்றினான் .அவன் திருவடி அருகில் ஒருவர் அவ்வளவு வெடிச் சத்தத்திற்கு முன்பும் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். சரியாக முச்சந்தியில் ராமன் எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான் .சோடியம் ஒளிக்கும் ,பரிவாரங்களின் அதிகாரக் கதறலுக்கும் நடுவில் அவன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.ஒப்பற்றவன் நீ ,என்னால் உன்னை வணங்குவதைத் தவிர்த்து வேறென்ன செய்ய முடியும் ? அவன் எனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்து என் நிலை பற்றி ஏதேனும் சொல்லேன் எனக் கேட்பது போன்றிருந்தது.நானும் அவனும் மட்டுமே ராக்ஷஸ சத்தத்திற்கு நடுவில் மிகவும் அமைதியாக இருந்தோம். நீ இன்னும் எவ்வளவு இடங்களுக்கு இவர்களோடு செல்ல வேண்டியிருக்கிறதோ ? நான் அறிய மாட்டேன். நீ அறிவாய்தானே ...இப்படி இவர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ; என்னைப் போல முச்சந்தியில் நின்று தரிசனம் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது ராமா ... நீ ஒப்பற்றவன் ,அளவிடற்கரியவன். சீதாதேவியோ உன்னிலும் பெரியவள் ...அவளுடைய புனிதத்தின் முன்பாக நின்று சரியாக முகம் ப

திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம்

Image
திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம் ஐம்பது ஆண்டுகளில் திராவிட இயக்கங்களின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி இப்போது முற்றிலும் பழமையின் நெடியடிக்கத் தொடங்கியிருக்கிறது.அதன் தத்துவார்த்த பின்னணிகள் முடங்கியுள்ளன.ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் இளைஞர்கள் மத்தியில் அது பெற்றிருந்த எழுச்சியும் ,அடித்தட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மாற்றத்தில் ,வளர்ச்சியில் அது ஏற்றுக் கொண்ட பொறுப்பும் குறிப்பிடத் தகுந்தவை.சமூக மாற்றத்தின் இடைப்பகுதியில் திராவிட கருத்தியல் மிக சிறந்த பங்காற்றியது.தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் திராவிடக் கருத்தியல் தவிர்க்க முடியாத அளவிற்கு மாநில உரிமைகளின் பால் செயலாற்றியிருக்கிறது. ஐம்பது ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் அரசியலில் ஒரு கருத்தியல் பங்காற்றியிருக்கிறது எனில் அது சாதாரணமான காரியமில்லை.இன்று நாம் காண்பது இற்று நொறுங்கிக் கிடைக்கும் அதன் நிலையை.உள்ளும் புறமும் அது நொறுங்கிக் கிடக்கிறது.ஐம்பதாண்டு காலம் மக்கள் அதன் சார்பில் இருந்திருக்கிறார்கள்.மக்கள் எந்த ஒன்றினையும் தேவையின்றி தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை.இன்று மக்கள் அதன் இற்று நொறு

முத்தரப்பிற்கு மத்தியில் ...

Image
முத்தரப்பிற்கு மத்தியில்  ... நம்மிடையே மூன்று வகையான சிந்தனைப் போக்குகள் முன்வைக்கப்படுகின்றன.உலகெங்கிலும் மூன்றாம் உலகப் பின்னணி கொண்ட அடிமைச் சமூகங்களில் உலவுகிற பொதுவான போக்குகள் இவை.முதல் வகை மேலை நாட்டுச் சித்தாந்தங்களை அப்படியே வாரிச் சுருட்டி நம்மிடத்தில் சேர்க்கக் கூடியவை.இவை நம்முடைய மிகையுணர்ச்சில்,ரொமேன்டிக் தளத்தில் வந்தது கலப்பவை.ஒரு சமூகத்தின் விடலைகள் ,அதிருப்தியாளர்கள் இந்த போக்கிலேயே வசீகரம் கொள்கிறார்கள்.பெரும்பான்மையான ஆதரவு ,அரசியல் ஆதரவு எப்போதும்  இந்த வகைக்கு கிடைக்கிறது.இவர்கள் தங்களிடம் இருப்பதனைத்தையுமே தாழ்வுணர்ச்சியில் வைத்து ரொமேன்டிக்காக சிந்திக்கக் கூடியவர்கள்.இவர்கள் செயல்வடிவத்திற்குள் ஒருபோதுமே நுழைவதில்லை.கலை, இலக்கியம் உருவாக்குகிற பார்வைகளை புறக்கணிப்பவர்களாகவும் ,எதிர்ப்பவர்களாகவும்,சுய சமூகத்தை வெறுப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள். காலனிய பிளவு உத்திகள் அனைத்தும் இவர்கள் வழியாகவே சமூகத்திற்குள்  உள் நுழைகின்றன.கலையிலக்கிய அச்சம் என்பது இவர்களின் பொது மனப்பாங்கு. இரண்டாவது வகையினர் உலகத்தின் சிந்தனைகளை நடைமுறை சார்ந்தது தன் வயப்படு

சாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் உண்ணாவிரதப் போராட்டம்

Image
சாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றுபடுவோம் சமய உரிமை காப்போம் எங்களுடைய சமய உரிமைகளுக்காகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதில் வருத்தமுற்றிருக்கிறேன்.இந்து சமயத்தில் அய்யாவழி தனித்த வழிபாடுகளும் ,தனித்தன்மையும் கொண்டது.தென்திருவிதாங்கூர்  சுவாதி திருநாள் ஆட்சி காலத்தில் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட இந்த வழிபாட்டை அய்யா வைகுண்டசாமிகள்  உருவாக்குவதற்காக 112  நாட்கள் சிறையிருந்த வரலாற்றைக் கொண்டது.இப்போது மீண்டும் தமிழக அரசின் அற நிலையத் துறையினரிடம் இருந்து அய்யாவழி வழிபாட்டு முறைகளைக்  காப்பதற்காக போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் செவி சாய்க்காத பட்சத்தில் இந்த போராட்டம் தீவிரமடையும் என்பதில் சந்தேகமில்லை.இந்த இக்கட்டில் இருந்து எங்களை பாதுகாக்க இந்து சமய பெரியவர்களும் ,சமூக நீதிபேரிலும் அய்யாவழியின் பேரிலும் பற்று கொண்ட சான்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வருகிற ஞாயிறுக்கிழமை மார்ச் 18  ம் தேதி முதல்கட்டமாக சாமிதோப்பு தலைமைப்பதியில் வைத்து ; அற நிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்

குடும்பம் என்பது புராதனமானதொரு அலுவலகம்

Image
குடும்பம் என்பது புராதனமானதொரு அலுவலகம் சமூகத்தின் பிற அமைப்புகள் ஏற்படுத்திய அலுவலகங்கள் பலவற்றைக் காட்டிலும் இதற்கு சிறப்பு அதிகம்.மனிதன் ஏற்படுத்திய அலுவலகங்கள் பலவற்றிலும் புராதனமான அலுவலகம் இதுவே.பல அமைப்புகளின் வேர் இந்த அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது.குடும்பம் என்கிற இந்த தொன்மையான அலுவலகம் ஆண் , பெண் என்கிற பலகீனமான உறவு நிலையில் மீது கட்டப்பட்டிருப்பது விந்தையானது.பலகீனமான அடித்தளத்தின் மீது உயர்ந்து நிற்கும் கோபுரம் போல. எப்போது வேண்டுமாயினும் உடைவதற்கு சாத்தியமான ஆண் பெண் உறவுநிலையை ; அது பல காலங்களாக பராமரிப்பு செய்து வருவது எவ்வளவு பெரிய ஆச்சரியம் ? எப்போது வேண்டுமாயினும் உடையும் சாத்தியம் கொண்டது உறவு என்பதை புரிந்து கொண்டோருக்கு; இந்த அமைப்பினைப் போல இசைவானதொரு அலுவலகம் வேறில்லை. அமைப்புகள் உருவாக்கும் எத்தனையோ அலுவலகங்கள் காலத்தில் அழிந்து விடுகின்றன.முற்றாக அழியும் தன்மை  கொண்டவை,உருமாற்றத்துடன் தன்னை தற்காத்துக் கொள்பவை என பல அலுவலகங்கள் .மத அமைப்புகள் உருவாக்குகிற; அரசாங்கம் உருவாக்குகிற அமைப்புகள்;  மடங்கள்,கல்விச்சாலைகள் போன்றவற்றை உதாரணம் சொல்லலாம்.மடங்க

ஆணை சிறுமைப்படுத்துவதில் கைதேர்ந்தவள் பெண்

Image
ஆணை சிறுமைப்படுத்துவதில் கைதேர்ந்தவள் பெண் ஏனெனில் அவன் எவ்வளவு பெரிய ஆணாக இருந்தாலும் அவனுடைய சிறுமையை அவள் அறிவாள்.ஊரே கொண்டாடும். அவன் பெரிய மலை போல, மாமலை போல நின்று கொண்டிருப்பான்.ஒரு கணத்திற்குள் அவனைச் சுருக்கியெறிந்து விடுவாள்.அது அவளது கதாபாத்திரம் .இதனை அறிந்து கொண்ட ஆண்கள் பக்குவம் அடைந்து விடுகிறார்கள்.துரதிர்ஷ்டம் என்னவெனில் தள்ளாத முதுமையில் மட்டுமே ஆணை இந்த பக்குவம் வந்து சேருகிறது .அதனால் அதன் பின்னர் ஒரு பலனும் கிடையாது என்றான பிறகு. அவள் இதனை அறிந்து செய்கி றாள் என்று சொல்லமுடியாது.பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடந்து அவளை வந்தடைந்திருக்கும் தொழில் நுட்பம் இது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான முரண்பாடு சிறுமைப்படுத்துவதிலும்,சிறுமைப்படுவதிலும் இருந்தே தொடங்குகிறது.சிறுமையே தன் நிஜ உருவம் என்பதை ஆண் அறிவதில் முடிவடைகிறது. கோயில் சமபந்தி ஒன்றில் நாங்கள் அமர்ந்திருந்தோம் .வயதான சாமியார் மனைவியுடன் எங்களுடன் அமர்ந்திருக்கிறார்.அவரைப் பார்த்தாலே தேஜஸ்.அருகிலிருந்த சிலரிடம் அவர் சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்.உண்மையாகவே மிகவும் பக்குவதுடன்தான் அவர் பேசிக் கொண்டி

இந்து மதத்திற்குள் ஒரு சிறுபான்மை மதம் அய்யாவழி

Image
இந்து மதத்திற்குள் ஒரு சிறுபான்மை மதம் அய்யாவழி "அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவ சிவா சிவ மண்டலம்" அய்யா வைகுண்டசாமியின் மதிய நேரத்து வழிபாட்டில் இடம் பெறுகிற "உச்சிப்படிப்பு" வாசகம் இது.மகிமைகள் நிறைந்தவனாகிய அல்லாவாலும் நிறைந்திருக்கும் சிவ மண்டலம் என அல்லாவைப் போற்றுகிறது இந்த வாசகம்.அய்யாவழியில் மதிய நேரத்து வழிபாட்டுப் பாடலுக்கு "உச்சிப்படிப்பு" என்று பெயர்.அய்யாவின் மதிய நேரத்து வழிபாட்டில் இஸ்லாமியர்களின் மதிய தொழுகையின் சாயலையும் உணர முடியும். இந்து மதத்திற்குள் அய்யா வைகுண்டர் காட்டிய வழிபாட்டு முறை என்பது முற்றிலும் புதியது.தனித்துவமானது.பல்வேறு விதமான மெய்மைகளை ஒன்றை நோக்கி நெறிப்படுத்தியவர் அய்யா வைகுண்டசாமிகள். அய்யாவழியில் வைகுண்டசாமியையே ஏக பரம்பொருளாகக் கண்டு வழிபடுகின்ற மக்களும் இருக்கிறார்கள்.அவரை அவதாரமாகக் கண்டு ,அவர் காட்டிய ஏக பரம்பொருளை வழிபாடு செய்பவர்களும் உண்டு.வைகுண்டசாமிகளின் வழிபாட்டுத் தலங்களான பதிகளிலும் ,நிழற்தாங்கல்களிலும் மதிய நேரத்தில் பாடப்படுகிற "உச்சிப்படிப்பு "என்கிற இந்த பாடல் மாணிக்க வாசகரின் த

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

Image
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் ஜெயமோகனின் "தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் " நூலுக்கு முன்னுரை எழுதித் தந்தேன்.சமீபத்தில் வாசித்த நூல்களில் எனது மனதிற்கு மிக நெருக்கமாக இருந்த நூல் இது.மிகப்பெரிய அக தரிசனம் இந்த நூல்.வழக்கமான மெய்மை பற்றிய சோர்வுகளில் இருந்து நம்மை விடுவிக்கும் நூல் இது.இந்த நூலுக்கு முன்னுரை எழுத வாய்த்தது இந்த நூலில் உள்ள தெய்வங்களின் ஆசிர்வாதமே. இந்த நூலில் இருந்து மெய்மை பற்றி நம்மால் உரையாட இயலுமானால் உண்மையாகவே நம்மால் மெய்மையை நோக்கி சில அடிகளாவது நெருங்க இயலும் . மிகச் சிறந்த ஆக்கம் .அவசியம் படித்துப் பாருங்கள். http://www.jeyamohan.in/107119#.Wprb5h1uY2x   இது அக வெளி  எனது விடலை வயதில் கோணங்கி ஒருசமயம் எனது சொந்த ஊரான பனங்கொட்டான்விளைக்கு  வந்திருந்தபோது “என்னடா ரெண்டு கிலோமீட்டர் தாண்டுறதுக்குள்ள உங்கள் ஊர்ல  எட்டு சுடலையை கடக்க  வேண்டியிருக்கு “என்று ஆச்சரியமாகக்   கேட்டார்.  இத்தனைக்கும் அவர் ஊரான கோயில்பட்டியிலும் சாமிகள் அதிகமே. ஆனால் அவர் எங்கள் ஊரைப் பற்றிச் சொன்ன கணக்கு தவறு. அவர் நேரடியாக கண்ணால் கண்ட சுடலைகளை  மட்டுமே கணக