Posts

Showing posts from February, 2018

ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது

Image
ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய மாடல் அது.பலரும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்கையில் அவர் மாற்றி கொள்ளவில்லை.எனக்கு அவர் அதனைக் கையில் கொண்டிருக்கக் காண மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.ஊரே ஒரு விஷயத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது என்றே கருதுவோம்.நாம் அதற்கு மாறுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பதில் தெளிவு இருக்குமேயானால் வாழ்வின் முதல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட்டதாகக் கருதலாம்.பிரபலத்தில் ஒதுங்கியிருந்து ஒரு நாடார் தேநீர் கடையில் நின்று சுவைக்கத் தெரிந்து விடும்.இது தெரியாதவர்கள் ஆயுள் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.பிறர் எப்படி நிம்மதியாக இருக்கிறார்கள் என்று திகைக்கிறார்கள்.பேஷனை நோக்கி நீங்கள் விரட்டிப் பிடிக்காமல் உங்கள் தேர்வை செலுத்த தெரிந்தவராயின் கொஞ்சம் கொஞ்சமாக நீங்களே பிறருக்கு பேஷன் ஆகிவிடுவீர்கள். ஒருமுறை அவரை நான் பார்க்க சென்றிருந்த சமயம் டி சர்ட்டை மாற்றி அணிந்திருந்தார்.நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.இன்று யாரும் அதனை அவரிடம் சுட்டிக் காட்டி அவர் சரியாக திருத்தாதிருக்கட்டும் என மனத

ஸ்ரீதேவி

Image
ஸ்ரீதேவிக்கெல்லாம் மாரடைப்பென்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கிறார்கள்.யாருக்கு வேண்டுமாயினும் ஏற்படுவது யாருக்கு வேண்டுமாயினும் ஏற்படலாமா ? சௌந்தர்யா விமான விபத்தில் காலமடைந்த போது இறைவன் மேலானவன்தான் இல்லையென்று சொல்லவில்லை.ஆனால் அவ்வளவு தெளிவு நிறைந்தவன் என்று சொல்வதற்கில்லை என்று தோன்றியது.ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு என்னும் போது அது மேலும் ஊர்ஜிதம் ஆகிறது. ஸ்ரீதேவி வயதான காலத்தில் நடித்த படங்களை நான் பார்த்ததில்லை.அது தர்மமல்ல.அது நன்றாக இருந்ததாகக் கூட சொன்னார்கள்,ஸ்ரீதேவிக்கெல்லாம் வயசே ஆகக் கூடாது.அப்படியொரு வேளை ஆகுமென்றால் அந்த கொடுங்கனவை நான் கண்ணால் காண வேண்டியதில்லை.ராம் கோபால் வர்மா, ஸ்ரீதேவி பற்றி ஒரு நேர்காணல் ஒன்றில் சொல்லும் போது ; ஸ்ரீதேவியை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு அவருடைய கணவரை எனக்குப் பிடிக்காது என்பதில் ,பதில்  தெரிந்து கொள்ள முடியும் என சொல்லியிருப்பார்.ஸ்ரீதேவிக்கெல்லாம் கணவர்,குழந்தைகள் என்றால் அது யோசிக்கவே மிகவும் மலிவாக இருக்கிறது. சிறு வயதில் அன்பானவர்களுக்கும்  ,பேரழகு  படைத்தவர்களுக்கெல்லாம் மரணம் ஏ

போலிச் சாமியாட்டங்கள்

Image
போலிச்  சாமியாட்டங்கள் நடிகர்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து அரசியலுக்கு முயற்சி செய்வதை பார்க்கும் போது ,தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்திருப்பதையே உணர முடிகிறது.என் இந்த வறட்சி நிலை ? அரசியல் பார்வைகளை சுயமாக ஏன் உருவாக்க இயலவில்லை ? அனைத்து அரசியல் பிரிவினர்களும் தமிழ்நாட்டில் பொய்மையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள்.அதிகாரத்தை தவிர்த்து இவர்களில் ஒருவருக்கு கூட ,அதாவது ஒரு பிரிவினருக்கு கூட உண்மையின் பேரில் நம்பிக்கையில்லை.அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒருவகையான தீய அரசியலுக்கு தமிழ்நாட்டில் பழக்கம் ஏற்பட்டு விட்டது.இதனை எளிதில் உடைத்து வெளியேறுவது உடனடியாக சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிந்ததுதான்.எதிர்காலத்திலேனும் சாத்தியமாகுமா ? மக்களின் பிரச்சனைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒருபோதும் உண்மையான தொடர்பே தமிழ் நாட்டில் இருப்பதில்லை.இந்த கட்சி ,அந்த கட்சி என்றெல்லாம் இதில் விலக்கு இல்லை.மக்களை கவருவதற்கான பொய்யான இலக்குகளே அரசியல் கட்சிகளிடத்தில் உள்ளன.அதிகாரம் மட்டுமே பொது இலக்காக உள்ளது. அதிகாரம் மட்டுமே இலக்கு எ

ஈகோ

Image
ஈகோ சிறந்த குரு ஆரம்ப நிலையிலேயே நமது அகந்தையை அடித்து நொறுக்கி விடுகிறான்.இதுவொரு நல்ல நிலை.நமது அகந்தை அடிபட்டு விடாமல் காக்கும் நிலைக்குப் பெயரே அகங்காரம்.குரு இதில் முதலில் வலிமையான  பங்களிப்பைச் செய்து விடும்போது,நிறைய காலம் நமக்கு மீதமாகிறது . இல்லையெனில் வாழ்க்கை அகந்தையை அடித்து நொறுக்கும்.அப்போது நிறைய வலிவுணரவை அடைய வேண்டியதிருக்கும்.தன் அகங்காரத்துடன் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது.அது எங்கேனும் முட்டுச்சந்தில் போய் நிறுத்தி முட்டி நிற்கும்.ஒரு மனிதனுக்கு அகங்காரம் உடைந்த பின்னர் ஏற்படுவதே விழிப்புணர்ச்சி. இப்போது பல இளைஞர்கள் தங்கள் அகந்தை உடைபட்டு விடக் கூடாது என்று : மலினமான , தங்களிலும் தாழ்ந்த இடங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நிற்கிறார்கள்.அகந்தை எங்கு நோக்கிக் கண் திறந்தால் உடைந்து விழுமோ ,அந்த இடங்களை தாழ்ந்த அடையாளங்களில் நின்ற வண்ணம் தாக்கத் தொடங்குகிறார்கள்.இது மிகவும் ஏழ்மை நிலை.பரிதாபகரமானது.எது உங்களை உடைத்து நொறுக்குமோ அதை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டும்.பாதை அந்த திசையிலேயே இருக்கிறது. என்னுடைய இளமைக் காலங்கள் முழுதும் என்னை யா

கொடைக்கானலில் கவிஞர் விக்ரமாதித்யனோடு உரையாடல்

Image
கொடைக்கானலில் கவிஞர் விக்ரமாதித்யனோடு உரையாடல் இசையின் கவிதைகள் ### குட்டி ஒடிசா கோயம்புத்தூர் மாநகராட்சியின் 93 வது வார்டில் புதிதாக உருவாகியிருக்கிற மைதானத்தில் மட்டையாட்டம் நிகழ்கிறது அங்கு ஒரிய மொழி ஒளி வீசுகிறது ஆட்டத்தின் முசுக்கரத்தில் கிளம்பும் புழுதியில் ஒரு "குட்டி ஒடிசா " எழுந்து வருகிறது ஒரு புளியமரம் பல தலைமுறைகள் காண்பது இன்று அம்மரத்தடியில் அமர்ந்திருந்த ரசிகர் கூட்டம் "மாரோ ... மாரோ .."என்று கத்துகிறது . அந்த இடது கை ஆட்டக் காரன் இறங்கி ஒரு இழு இழுக்கிறான் மகிழ்ச்சியின் கூச்சலினுடே பறந்து செல்லும் அப்பந்து மைதானத்தைத் தாண்டி ஒரு மூமுதுகிழவனின் தோளில் விழுகிறது அவன் அப்பந்தைத் தூக்கி அதே மகிழ்ச்சியின் கூச்சலினுடே திரும்ப எறிகிறான் அவனை "கணியன் பூங்குன்றன் " என்றறிக ! 2 18ஆம் பெருக்கு : பாடிவீடு வாராது காண் மழை வெள்ளம் வடிந்த மணல் பரப்பில் உயிர்க்கும் மெல்ல ஒற்றிய பெண்களின் சிந்திய திலகம்