Posts

Showing posts from January, 2018

நீங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ?

Image
நீங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ?  நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ? என்பதனை கவனிப்பேன்.நீங்கள் பேசுகிற விஷயங்களோடு வாழ்க்கையும் வாழ்வனுபவமும் அது சார்ந்த தரிசனங்களும் பொருத்தப்பாடு கொண்டிருக்குமெனில் இமைய மலையைச் சரிப்பது பற்றி பேசினாலும் சம்மதமே .இல்லையெனில் புறக்கணித்து விடுவேன்.படைப்பு வாழ்க்கையின் சலனம் , தரிசனம் இரண்டும் ஒன்று குவிந்த இடம் தமிழில் பொதுவாக அறிவுத்தளங்களில்  வாழ்க்கையோடு சம்பந்தமே, தொடர்பே இல்லாத பாசாங்கான ஒரு மொழியை தொடர்ந்து பின்பற்றுகிறோம்.நமது அத்தனை விதமான அடிப்படைச் சிக்கல்களும் இங்கிருந்தே தொடங்குகின்றன.பொது மக்களிடம் இந்த பாசாங்கு இல்லை.நமது போலி அறிவுத் தளங்கள் இதன் மீதே பெரும்பாலும் சவாரி மேற்கொள்கின்றன.நாம் பின்பற்றாதவற்றை பொதுவில் பேசுவதில் சிறிய கூச்சமும் நம்மிடமில்லை ஒவ்வொரு காலகட்டத்திலும் இதற்காக சக்கைகள் நம்மிடம் வந்து குவிகின்றன.உடைப்பது ,நொறுக்குவது ,தந்தையரைக் கொல்வது இதுபோல இன்னும் ஏராளம்.இதில் எதனையேனும் உடைத்தவன் ஒருவன் பேசுகிறான் எனில் எனக்கு அதில் கேட்பதற்கு ஒரு விஷயம் இருக்கிறது.அவன் எப்படிய

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

Image
அழகிய புது மனைவி உட்பட ஐந்து  கவிதைகள் 1 அழகிய புது மனைவி யோனி மடிப்பில் பிசுபிசுப்பு நேற்று சாயங்காலம் ரயிலேறிய ஒருத்தனின் புது மனைவி அவள் . நேற்று அவள் ரயிலேறும் போது கழுவப்பட்டு புதுக்கனவு மூண்ட யோனியாய் அது இருந்தது . இப்போதோ காலை ஒளி கண்ணாடியில் பிரதிபலித்து கனவு தளர்ந்த உடலை மூடுகிறது ,கண்கள் கூசுகின்றன ரயில் நிலையத்தில் நடந்து செல்கிறாள் அழகிய புது மனைவி நேற்று ரயிலேறும் போது கணவனும் கணவனின் நண்பனும் உடன் வந்தனர் . கணவனோ அழகிய புது  மனைவியின் கரங்களை பற்றியபடி ஓடும் ரயிலுக்கு வெளியே தனித்திருந்தான் . நண்பன் புது மனைவி பேரில் கொண்ட கவர்ச்சியால் கணவனுக்குப் புரியாமல் புது மனைவிக்கான சமிக்சைகள் செய்து கொண்டிருந்தான் ஆனாலோ எல்லா சமிக்சைகளும் எல்லோருக்கும் திறந்தேயிருக்கின்றன  அழகிய புது மனைவி நேரடியாய் வெறுத்து ,விரும்பிய போதும் சமிக்சைகளை பொருட்படுத்தவில்லை நண்பனின் கண்கள் அழகிய மனைவியை ஊடுருவி அறுத்தன . இப்படி அழகிய மனைவியின் ரயில் பயணம் கணவனோடும் நன்பனோடும் கனவாய் நிகழ்ந்தது நடைபாதையில் இப்போது அவள் நடந்து செல்லும் போது ஊடுருவிய கண்

தன்னை அழகியென்றுணர்ந்த அழகியின் பிரச்சனைகள்

Image
தன்னை அழகியென்றுணர்ந்த அழகியின் பிரச்சனைகள் எங்கள் மாமியொருத்தி சிறுவயதில் அழகு.மாமியென்றால் நாங்களும் மாமியென்றுதான் அழைப்பது. அவ்வளவு அழகு. அவளை சிறுவயதில்  செல்லம் கொஞ்சாதவர்கள் இல்லை.வழிப்போக்கர்கள் கூட நின்று ஏதேனும் கேட்டு விட்டுக்  கடந்து செல்வார்கள்.ஒன்றுமே கேட்பதற்கு இல்லாதவர்கள் சமயம் என்ன ? என்றாவது கேட்பார்கள்.திரும்பி பாராமல் அவள் சமயத்தை தவறாக சொல்வாள்.அதனை ஒருவர் கூட மறுத்துப் பேசியதில்லை.அவ்வளவு அழகு அவள்.சமயத்தை தவறாகச் சொல்வதென்றால் ஏழுமணிநேரம்,எட்டு மணிநேரம் தவறாக இருக்கும் . அவள் எங்களை எடுத்து இடுப்பில் கொஞ்சும் போது காண்பர்களுக்கு எச்சூறும் . அவள் அழகாக இருந்ததில் ஒரு பிரச்சனையும் இல்லை.ஆனால் அவளும் தன்னை அழகியென்றுணர்ந்ததில் ஒருபாடு பிரச்சனைகள்.அவளுக்கும் பிரச்சனைகள் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனைகள்.பின்னர் வயது வெளியில் ஏற ஏற ஒருபாடு பிரச்சனைகள்.அகத்திலும் புறத்திலும்.உள்ளத்தில் வயதாகாதவள் அவள். வளரும் போது முதலில் பிற அழகையெல்லாம் மறுத்தாள்.பின்னர் தாக்கத் தொடங்கினாள்.தனது  அறுபத்தியாறு வயதிலும் அவள் இவ்வாறே பயின்றதில் ஏற்றெடுத்த சிரமங்களை மாமா அறிவார்.தமிழ

வீரலெட்சுமி கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்

Image
வீரலெட்சுமி கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் 1 உற்சாகமற்ற பழைய பியேட் கார் தொலைதூர பயணங்கள் ஏதும் செய்ததில்லை இதுவரை நகர விடுதிகள் நடன அரங்குகள் இசை விழாக்கள் வைபவ நிகழ்வுகள் என்று சென்றிருக்கிறது அது எண்ணையில் கழுவப்பட்ட பழுதடைந்த சுவர்க்கடிகாரத்தின் உள்ளுறுப்பு மட்டும் தனியே இயங்கிக் கொண்டிருப்பது போல அதன் இயந்திரங்கள் இன்றுவரையில் நுட்பமாகத் தொழில்படுகின்றன  தினசரி கழுவப்பட்ட பிறகும் காலத்தின் நீங்காத தூசுப்படலம் போர்த்தியிருக்கிறது வெளித்தோற்றம் நினைவின் பயணமாய் காரின் பின்னிருக்கை இடது ஓரத்திலமர்ந்து பயணம் செய்கிறாள் யுவதி நகரத்தில் குளிக்க இயலாத வேசியின் மனமும் , விழாக்களின் சங்கீதமும் இணைந்து நகரும் யுவதியின் கார் தனிமையால் பூட்டியடைக்கப்பட்டுள்ளது யுவதி ,உற்சாகமற்ற  பியேட் காரிலிருந்து நடன அரங்கிற்குச் செல்கிறாள் இசை விழாக்களில் பங்கு கொள்கிறாள் வைபவங்களை ஊடறுக்கிறாள் வெளியே புதிய வாகனங்களுக்கு நடுவே நகரம் பற்றிய வரைபடமாய் நிற்கிறது பியேட் கார் மேலும் வயதான ஓட்டுனரிடம் பெருகும் சுருட்டு வாசனையில் கட்டப்பட்டுள்ளது அது த

சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும்

Image
சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும் பகுதி - 1 மிகக் குறைந்த ஊழியத்தில் ,அதிக அறுவடைகளைப் பெறவேண்டும் என்று எழுத்தாளர்களும் விரும்புவது எல்லா புறங்களிலும் தெளிவாகத் தெரிகிறது . கவிஞர்கள் தங்களின் முதல் தொகுப்புகளுக்கே சிலை அமைக்கப் படவேண்டுமென அரும்பாடு படுகிறார்கள் . பரிசோதனைகள் பேரிலோ , சவாலான காரியங்கள் பேரிலோ ஈடுபடும் நிதானத்தை இழந்து பரிதவிக்கிறார்கள் . கத்தரிக்காய் பயிரிடுதல் தொடங்கி கோழிப்பண்ணைகள் , அணுஉலை நிர்மாணம் வரை இலக்கியத்திலும் சாத்தியம்தாம் என்பதை ஊர்கூடி கண்டுகளிக்கிறது .இவை உலகின் எல்லா ஊர்களிலும் உள்ள விஷயங்களும்தான் .வேடிக்கைகளும்தான் . அவற்றுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்ன?அப்படி வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா ? எல்லா பிரமுகர்களையும் இங்கே எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள் .பழைய கிளி ஜோசியகாரர்களைபோல , பிரமுகர்களோடு எடுத்துக்கொண்ட படங்களும் நொடியில் கைத்திரையில் சொடுக்குகின்றன .ஆனால் கலையில் ஒரு கிளி ஜோசியக்காரனின் இடத்தை நோக்கி நகருவதுஎப்படி என்பதைத்தான் கண்டுபிடிக்கத் தெரியவில்லை . இங்கே பலரும் இன்று கலை இலக்கிய அப்த

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

Image
லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்  1 விஜி வரையும் கோலங்கள்  மையத்தில் நான்கு மலர்கள் கொண்டது  வண்ணங்கள் இருக்கும் இல்லாமல் இருக்கும் போதும் வண்ணங்களை கோலத்தில் அமரச் செய்யும் வித்தை  விஜி மட்டுமே அறிந்தது நீர் தெளிக்கும் நேரம் மனதில்  வரையவிருக்கும் கோலம் நிழலாடும்  தியானத்தில் இருக்கும்  தெய்வம் விஜி வரையும் கோலங்களின்  சிறப்பு யாவரும் அறிந்ததே எப்போதும் சாலையில் மேலேறி இறங்கும்  ஒரு நாசூக்கான சுற்றில்  விஜி ஒளிந்து கொள்கிறாள்  அல்லது வெளிப்படுகிறாள் அதில் எனது நாசிக்கு  காட்டு விலங்கின் உறுமல் சப்தம்  மிருக வாசம் கண்களில்  யானைத் தடம் அதனை மட்டும் அவள்  தன்தசை கொண்டு  வரைகிறாள் தெய்வங்கள் அந்த வளைவில்  வந்தமர்ந்து கொள்கின்றன  அவற்றுக்கு அவ்விடம் தாங்கள் அமர வேண்டியது  என்பது கச்சிதமாக  தெரிந்திருக்கிறது காட்டுத் தீயை அணைப்பதற்குத்தான்  விஜி முதலில் தண்ணீர்  தெளிகிறாள் 2-  சூக்கும உடலாக கிளைபரப்பி நிற்கிறாள் அம்மை பேரிசக்கி  முலை துளிர்த்து அதில் புதுமடலாக  பூத்துக் குலுங்குகிறாள்  யுவதி அரூப சரீரம்  ஆனந்தக் கூத்தாடுகிறது  முடிவிலியி

அன்னை ஆண்டாளின் விஷயத்தில்

Image
அன்னை ஆண்டாளின் விஷயத்தில் எல்லா மதங்களிலும் புனித அன்னையர் உள்ளனர். அவதாரங்களும் உள்ளனர். வரலாற்றுத் தரவுகளை மேற்கொண்டோ ,தகவல்களின் தரப்பான விஷயங்களை முன்வைத்தோ எந்த தரப்பைச் சேர்ந்தவர்களை வேண்டுமானாலும் சுருக்கவோ,பிழையான அர்த்தங்களை அவர்களில் தொனிக்கச் செய்யவோ முடியும்.அது பெரிய காரியமெல்லாம் ஒன்றுமில்லை.அப்படியொருவர் முன்வைக்கும் வாதத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்கவே இயலாது. ஒரு மதத்தைச் சார்ந்த நம்பிக்கைகளில் புனிதங்களில் வெறுப்பை மேற்கொள்ளும் இந்த உத்தி இன்று செல்லுபடியாகக் கூடியதல்ல.அது வெறுப்பை பொதுவில் இறக்கி வைப்பது ,இப்படி இறக்கி வைத்த பிற்பாடு அதற்கு வருகிற எதிர்வினைகள் நாங்கள் நினைத்த விதத்தில் நாகரிகமாக இல்லை என்று வாதிடுவதில் பொருளேதும் கிடையாது.அன்னை தெரசா கிறிஸ்தவத்தில் புனித அன்னை.எனக்கும் அவர் புனித அன்னைதான்.இந்து மதத்தில் காரைக்கால் அம்மையும் ,அன்னை ஆண்டாளும் ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்ட தெய்வங்கள். இங்கே எந்த சொற்களுக்கும் ,பொருளுக்கும் ஒரே விதமான அர்த்தங்கள் கிடையாது.பொதுமக்கள் கொண்டுள்ள அர்த்தங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவில் பேச இயலாது.இதற்கு உ