Posts

Showing posts from 2018

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

Image
நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 போலியான அன்பில் வலிந்து வழியனுப்ப வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்ட நண்பன் வழியில் வருவோர் போவோரையெல்லாம் திட்டி கொண்டே வந்தான் ஏன் இந்த அளவிற்கு என்னைத் திட்டிக் கொண்டே வருகிறாய் ? இறக்கி விடச் சொல்லிவிட்டேன் 3 அவன் என்னைத் திட்ட அது என்னுள் வந்தமர்கிறது நான் மற்றொருவனை திட்ட அவன் மற்றொருவரிடம் கொண்டு சேர்கிறான் யாரின் அகத்தளம் இது என்றே தெரியவில்லை நடந்து முடிந்த விபத்திற்கு 4 நல்லபடியாகப் பேசினால் நல்லபடியாக நினைத்துக் கொள்கிறார்கள் மற்றபடி நடத்தையில் ஒன்றுமில்லை 5 கூப்பிடும் தூரத்திலே எல்லாமே இருக்கின்றன துயரத்தை அழைப்பவனிடம் துயர் வந்து சேருகிறது என்னை எப்படி நீ அடையாளம் கொண்டு கொண்டாய் என அவன் கேட்கிறான் நீதானப்பா அழைத்தாய் என அது திருப்பிக் கேட்கிறது 6 தூய அன்பு நரபலி கேட்கும் பலியானவன் மீதே அன்பெனக் கதறும் 7 மதிக்கத் தெரியாதவனுக்கு செயல் இல்லை 8 ஒரு வயல் உருவாவதற்குத் தேவையான சோறு

எவ்வளவு ஆச்சரியமானவை

Image
எவ்வளவு ஆச்சரியமானவை 1 அவளைத் தொடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல அவள் வளர்க்கும் அத்தனை பேய்களுக்கும் சேர்த்து நீ பொறுப்பெடுக்க வேண்டும் 2 ஆதியிலே தொடங்கி அவள் மீது ஏறி அமர்ந்து வருகிற பேய்கள் அவை சுலபத்தில் அடங்காது 3 கண்கள் ஆயிரம் ஒளியாண்டுகளை அறியும் 4 அவளுடைய வயிறு ஆதி நட்சத்திரமும் ஆதி மிருகமும் இணைந்தது 5 சாந்தமாயிரு அது ஒன்றே உனக்கு அருளப்பட்டது 6 நான் இருக்கிறேன் எனது குழந்தைகள் இருக்கிறார்கள் உறவுகள் நட்புகள் இருக்கிறார்கள் காகங்கள் இருக்கின்றன எல்லாவற்றையும் காண கண்கள் இருக்கின்றன இவையெல்லாம் எவ்வளவு ஆச்சரியமானவை 7 கிடந்து துயிலும் நாய் பதட்டத்தின் திசைகளில் எல்லாம் கண்களைத் திருப்புகிறது 8 இப்பொழுதில் வாழ்பவனை இறந்த காலத்தில் வாழ்பவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் எதிர்காலத்தில் இருப்பவன் பொறாமைப்படுகிறான் 9 எதையும் சரிப்படுத்த இயலாது வேண்டுமானால் நீ சரியாக இரு 10 தேங்கிய நீர் ஓடும் நீரை விஷமாக்கும் 11 ஏன் மாயா அவனை அறிந்து கொண்டேன் என இவனை அறிந்து கொண்டேன் என தன்னை அறிந்து கொண்டானா இந்த தான

பெரியாரியர்களின் தேவை

Image
பெரியாரியர்களின்  தேவை கௌசல்யா ,சக்தி திருமணத்தை முன்வைத்து பல்வேறு விதங்களில் யோசித்துப் பார்த்தேன்.ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னால் ஒரு சமூகம் இந்திய வாழ்வில் அவசியப்படுகிறது.கௌசல்யா போல பெருந்துயருள் நுழைந்து விடும் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் பொதுச் சமூகங்கள் எவையேனும் நம்மிடத்தில் இருக்கிறதா ? இந்த திருமணத்தில் பல்வேறு தரப்பினர் நின்று கொண்டிருந்தாலும் கூட பெரியாரியர்களே சூழ்ந்து நின்று காக்கிறார்கள் என்பது வெளிப்படை .பெரியாரியர்களின் தேவை இன்னும் முடிவடையவில்லை என்பதனையே இது காட்டுகிறது. பெரியாரியர்களின் சித்தாந்தங்கள்,கொள்கைகள் ,பிரகடனங்கள் எவற்றின் பேரிலும் எனக்கு நம்பிக்கையில்லை.அதற்கு காரணம் அவர்களை திட்டமிட்டு மறுப்பதும் அல்ல.அதற்கான ஒரு அவசியமும் எனக்கு இல்லை.அவர்களின் முழக்கங்கள் பலதும் தட்டையான புரிதல்களில் இருந்து வெளிவரக்கூடியவை .வாழ்வைப் பற்றிய மிகவும் எளிமையான முன்முடிவுகளை ஏற்படுத்துபவை என்பதனால் தான்.ஆனால் அவர்களுக்கும் இங்கே ஒரு சமுகமிருக்கிறது,அறவுணர்ச்சியிருக்கிறது.கலாச்சாரம் இருக்கிறது.பிறருடைய போலியான நீதியுணர்ச்சியைக் காட்டிலும் செயல்பாடுகளில் அவர்

நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும்

Image
நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும் 1 நீங்கள் கருணையுள்ளம் கொண்டவராக இருக்கலாம் அதற்காக இந்த வாழ்வை கருணையோடு வாழ்ந்து விடுவீர்கள் என்று சொல்ல முடியாது 2 எதை சம்பாதித்தீர்களோ அதுவே கடைசியில் எஞ்சி நிற்கிறது 3 பொறாமையால் ஒருவனைத் தாக்கும் போது இதற்காகவே காத்திருந்தவனைப் போல அவன் ஒருபடி மேலேறிச் செல்கிறான் இல்லையானால் இந்த காரியம் நடந்திருக்காது 4 நீங்கள் வைத்திருக்கும் 15தையும் இழந்து பெற்றதந்த 16 . 16 அவன் கைலிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறீர்கள் 15தையும் அவன் பாதத்தில் கொண்டு போய் வைத்து விடுங்கள் 16றை அவனிடமிருந்து திருடியேனும் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் 5 நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும் 6 வாழ்க்கை எதை செய்யச் சொல்கிறதோ அதை மட்டும் செய் உன் இஷ்டப்படி எதையாவது செய்து வைக்காதே அது வாழ்கைக்குப் பிடிப்பதில்லை 7 எல்லோரும் வெளிச்சத்தில் இருந்தால் இருட்டில் வேலை தேடு 8 சுத்தமாக துடைக்கப்பட்ட தரையில் படித்த புத்தகங்களில் சில பயன்முடிந்த பொருட்களில் சில சிந்திக் கிடக்கட்டும் சரிப்படுத்தாதே 9 தீக்குளிக்க விரும்

எவ்வளவு செலவு ?

Image
கேட்கவே மாட்டான் கவிதைகள் - 18 1 என்னைப் போலிருப்பவனை பிடிக்கமாட்டேன் என்கிறது பயந்து முகம் திருப்பி விடைபெற்று விரைகிறேன் என்னைப் போலிருப்பவனிடம் இருந்து என்னைப் போலிருப்பவனிடமிருந்து எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் அவ்வளவு இடைவெளி இருக்கிறது பராபரமே இருவருக்கும் என்னைப் போலிருப்பவன் என்னைப் போலவே இருக்கிறான் இன்னும் எவ்வளவு தூரம் கடந்து கல்லும் முள்ளும் சவுட்டி என்னிடம் வந்து சேர வேண்டும் இந்த என்னைப் போலிருப்பவன் ? 2 என்னையே எவ்வளவு நேரம் உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருப்பது ? அதனால்தான் வெளியே வந்து ஒருமுறை வானத்தைப் பார்த்தேன் ஆச்சரியம் வானம் நான் ஆனது இப்போது 3 ஒரு ரயில் நிலையம் ஒரு போதும் ஒரு ரயில் நிலையமாக இருப்பதில்லை அதற்கு ஆயிரம் முகங்கள் அதில் ஒன்று அனாதை பையனுடையது 4 கண்டு வெறுக்கும் தன்மையில் இங்கே தெருவில் நடக்கிறார்கள் பாருங்கள் சாலையில் திரிகிறார்கள் பாருங்கள் கண்டு வியக்கும் அத்தனைபேரும் இப்படித்தான் இருந்தார்கள் 5 பேராசை அவனுக்கில்லை இரண்டு பிடி சோறு தேவை ஒன்றை எடுத்து அவனுக்கு கொடு பேராசைய

பொடிப்பொடி பொடி கவிதைகள் பத்து

Image
பொடிப்பொடி பொடி  கவிதைகள் பத்து  1 ஏராளம் ஈசல்கள் வந்து நிறைகின்றன  அதற்குத் தக்க பல்லிகள் எல்லா ஈசல்களும் ஒரு ஈசல் தான் என்பது போல  தொட்டு நக்கி  எல்லா பல்லிகளும்  சுவரிலிருந்து காணாமற் போகின்றன  நாங்கள் அத்தனை பல்லியும் ஒரே பல்லி தான் என்பது போல 2 அடித்துப் பெய்கிறது பேய்மழை  அனைத்தும் நிறைகிறது  ஊற்றின் தாய்மடி நிறைகிறது  ஊருணி நிறைகிறது  எண்ணங்கள் நனைகிறது அடுத்து எறும்புப் புற்றுக்குள்  காலடி எடுத்து நனைக்கையில்  மொத்த மழையையும் தடுத்து நிறுத்துகிறது  சிறிய எறும்பு  புற்றின் வாயிலில் 3 அசுரர்கள் எப்படி அசுரர்கள் ஆனார்களோ  அப்படியே  தேவர்களும் தேவர்கள் ஆகிறார்கள்  அனுபவம் கிளர்ந்து அடிக்க அடிக்க அசுரனாகிக் கொண்டே இருக்கிறான் அசுரன்  வலிக்க வலிக்க தேவனாகிக் கொண்டேயிருக்கிறான் தேவன் 4 நானொரு கைப்பிடியளவு சாம்பல் பேசுகிறேன்  வாழ்க்கையென்பது தித்திக்க தித்திக்க தேன் . நானொரு துளி தேன் பேசுகிறேன்  கைப்பிடியளவு சாம்பலின் வயிற்றுக்குள்  எவ்வளவு ருசி 5 கடைசியாகத் திரும்பிய பல்லியிடம்  நான் கேட

எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ?

Image
எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ? திருநெல்வேலியில் ஜெயமோகன் ஆற்றிய உரை மிகச் சிறந்த உரை.சு.ராவின் மொழியில் சொன்னால் ஆகச் சிறந்த உரை எனலாம்.எளிமையான வடிவத்தின் பால் அமைந்திருந்த அந்த உரை ஏராளம் கிளை வாயில்களை கொண்டு அமைந்திருந்தது.அதிலிருந்து கிளைத்து எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.திரும்பும் ஒவ்வொரு திசைகளிலும் கண்டடைய பல விஷயங்கள் உண்டு. பன்முகத்தன்மையை தன் முழுமையில் நிறைத்திருந்த உரை அது.நவீனத்தின் குறுகிய சந்தில் இருந்து விடுபட்டு வெகுதூரம் பயணித்த உரை.பெரும் தரிசனம் என்றால் அதில் பிழையில்லை.இரண்டு மணிநேரம் அந்த உரையை கேட்டவர்கள் இருபது வருடங்கள் செலவு செய்தாலும் அடைய முடியாத தரிசனத்தைப் பெற்றிருப்பார்கள் .இதனை ஒரு அடிப்படை தரிசனம் என்பேன்.இதனை உணரும் ,காணும் தன்மை பெறாதவர்களின் விமர்சனங்கள் ,எதிர்வினைகள் ,செயல்கள் அனைத்தையும் வீணானவை அல்லது பொறுப்படுத்த லாயக்கற்றவை என்று சொல்லி விடலாம். சு .ராவின் பெரும்பாலான உரைகளை கேட்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்.கச்சிதத்தன்மையோடு , தான் கொண்ட பொருளில் விலகாத தன்மையுடன்; அவருடைய கட்டுரைகளுக

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

Image
விபத்திற்குப் பின்னர் ஓடுகிற கார் ஊருக்குப் புறத்தே சாலையோரத்தில் நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது விபத்தில் பழுதடைந்த கார் சுற்றி செடிகொடிகள் முளைத்து ... ஓட்டுனரின் ஜன்னல் வழியே பிரண்டைக் கொடி தளிர் நீட்டி வெயில் பார்க்கிறது பின்னிருக்கையில் பால அரசு பாலாம்பிகை கோலம் நீங்கள் தூரத்திலிருந்து பார்த்து விட்டு கடந்து சென்று கொண்டேயிருக்கிறீர்கள் காட்டுக்குள் நின்று கொண்டிருப்பது போல நினைவுகள் மூடிக் காத்திருக்கிறது அது நீங்கள் ஊர் பைத்தியம் என நினைத்து ஒருவனை விரட்டியனுப்பினீர்களே அவன்தான் இத்தனை தாவரங்களையும் அழைத்துக் கொண்டு தினமும் அந்த வண்டியை விபத்திற்குப் பிறகு ஓட்டிக் கொண்டிருக்கிறான் பின்னிருக்கையிலிருந்து பயணம் செய்கிறார்கள் விபத்தில் இறந்தவர்கள் அதுவொன்றும் சும்மா நின்று கொண்டிருக்க வில்லை நினைப்பது போல 2 "பத்மா டீச்சர்" எப்படி இங்கு வந்து சேர்ந்தார் ? வீட்டிலிருந்து இந்த வெட்டவெளியை வந்தடைய எவ்வளவு தூர பிரயாணம் தேவைப்பட்டிருக்கும் ? வெளியூர் பேருந்து நிலையத்தின் ஓரத்தில் மாநகராட்சி குப்பைத் தொட்டி அருகில் படுக்க

தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று

Image
தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று " ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணுவே நம " தீராத நோய்களில் உழல்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.குணமாகும்.மந்திரங்களை எப்படி முறையோடு உச்சரிக்க வேண்டுமோ அப்படி,விரதம் மேற்கொண்டு உச்சரித்தால் பலன் அதிகம்.சில விஷயங்களை காரணம் கேட்காமல் கடைப்பிடித்து பலன் தெரிந்து கொள்வதே நல்லது.கடைபிடிப்போருக்கு காரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ;  மெல்ல மெல்ல விளங்கி விடும். தன்வந்திரியை மறந்தால் தன்வந்திரியும் உங்களை மறந்து விடுவார்.தன்வந்திரி என்றில்லை யாரானாலும் இப்படித்தான்.நினைக்க மறப்பதை அடையவும் முடியாது.தன்வந்திரி மஹா விஷ்ணுவின் அவதாரம்.அவருடைய அம்சம்.எதுவெல்லாம் உயரியதாக உள்ளதோ,அருங்காரியமாக அமைகிறதோ அவையெல்லாமே மஹா விஷ்ணுவின் அம்சங்களே.நம்மிடமும் மஹா விஷ்ணுவின் அம்சம் உண்டு.சதானந்தமே அது.சதானந்தத்தில் இருந்து கீழிறங்கும் போது நோய்கள் மிக எளிதில் தாக்குகின்றன. எவர் ஒருவருக்கும் வேண்டாத நோய்கள் ஏற்படுவதில்லை.நம்முடைய வேண்டுதல்கள் ஒவ்வொன்றிலும் தீராத பல நோய்களும் அடங்க

கவிஞன் பிறரில் மேன்மையானவன்

Image
தன்னை மாறுதலுக்குட்படுத்திக் கொண்டிருக்கும்  கவிஞன் பிறரில் மேன்மையானவன் தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான்.மேம்பட்டவனாகிறான்.தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பார்கள்.சிறந்த கவிக்கு பண்பு இதுவல்ல.அவனுடைய சில கவிதைகளை படித்து விட்டு அவனுடைய விதியைப் பற்றி தீர்மானம் செய்து விடாத உயரிய பண்பை  அவன் கொண்டிருப்பான்.அவன் வாழ்வின் மீது இயற்றுகிற சலனங்கள் தொடர்ந்து மாறுதலைடைந்து கொண்டே இருக்க வல்லவை.அத்தகைய கவிகளில் ஒருவர் தேவதச்சன் கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் தேவதச்சனின் கவிதைகள் அவர் ஏற்கனவே தன்னை நிறுவிய விதத்திலிருந்து வேறுவிதமாக அமைந்திருக்கின்றன.சரஸ்வதியை மையமாகக் கொண்டு நெடுங்கவிதையின் தோற்றத்திலிருக்கும் இந்த கவிதைகள் தனித்தனியாகவும் சிறப்புடன் உள்ளன. தேவதச்சன் கவிதைகள் சிறப்பு தருணங்களையும் கொண்டிருப்பவையே ஆனாலும் கூட அதற்காக காத்திருப்பவை என்று சொல்வதற்கில்லை.பல சந்தர்ப்பங்களில் அ

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது

Image
கல்குதிரை இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள் அந்த குழந்தைக்கு வயது ஐம்பது ( 15  கவிதைகளின் தொகுப்பு ) - லக்ஷ்மி மணிவண்ணன் 1 அவளிடம் அம்மனைப் போல இருக்கிறாய் என்று சொன்னபோது உண்மையாகவே அம்மனைப் போலவே இருந்தாள் குனிந்து கீழே பார்த்தவள் கீழே கிடந்த அவள் அம்மனை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு நகர்ந்தாள் எம்மாடி எப்போதடி எடுத்துக் கொள்வாய் என்றிருந்தேன் என்றாள் அவள் எடுத்து சூடிக் கொண்ட அம்மன் 2 நேற்றைய காலையில் என தொடங்கினாள் அது ஏன் இன்றைய காலையில் வந்து அமர்ந்திருக்கிறது என்றேன் வேறொன்றுமில்லை இன்றைய காலையை நேற்றைக்குள் தள்ளி விட முடியுமா என முயல்கிறேன் என்கிறாள் இரண்டு காலைகளை வைத்திருக்கும் கனம் இருவரிடமும் மண்டியிட்டு அமர்ந்து கொள்கிறது பொழுதிற்கு ஒரு பொழுது என்பதெல்லாம் ஒரு அர்த்தமாகுமா என்ன ? 3 வேகமாக வந்து மோதிய பட்டாம்பூச்சியை அடிக்க ஓங்கிய கையைத் தடுத்து மெல்ல இறக்கினேன் மார்பில் சிறிது நேரம் இருந்த அது பின் பறந்து சென்றது மார்பில் தேன் ஊறி ஒழுகுவதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது ஓங்கிய கை காம்பை நீட்டி சுவைக்கத் தருகிறேன்

குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ?

Image
குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ,காவல் தெய்வங்கள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தை அளத்தங்கரை குடும்பம் என்பார்கள்.பொன்னார் குடும்பம் பெண் வழி உறவின் நிமித்தம் இங்கே வந்தவர்கள்.ராஜாக்கமங்கலம் உப்பளத்தை திருவிதாங்கூர் ராஜாக்கள் காலத்தில் உரிமையாளராக வைத்து நடத்தியவர்களின் குடும்பம் அது .பெரிய குடும்பம் .இன்றும் பெரிய குடும்பமே. எங்களுடைய குடும்பத்திற்கும் அவர்களுக்கும் உறவு உண்டு.அவர்களுடைய குடும்ப தெய்வத்தின் பெயர் மனோன்மணி .இன்று வரையில் அவர்கள் குடும்பத்தின் ரகசிய தெய்வமாக மனோன்மணி திகழ்கிறாள்.குடும்பத்தினர் எங்கெங்கோ பரந்து விரிந்து பரவியிருந்தாலும் ஆண்டின் எல்லா நாட்களிலும் மனோன்மணிக்கு விளக்கு போட வேண்டும்.ஒவ்வொரு நாளும் குடும்ப அங்கத்தினர் யாரேனும் ஒருவர் எங்கிருந்தாலும் வந்து செய்ய வேணும்.ஒவ்வொரு நாளுமென ஆண்டு முழுவதற்கும் யார்யார் செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள்.தவறாமல் செய்து வருகிறார்கள். உங்கள் உயிருக்கும் உடமைக்கும் இந்த குடும்ப தெய்வங்களே அரண் .உடலுக்கோ உடமைக்கோ இடர்பாடு ஏற்படுகிறதெனில் மனோன்மணி முன்னி

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

Image
வெயிலாள்  டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ் ஜெயமோகனும் ,அருண்மொழி நங்கையும் திறந்து வைக்கிறார்கள் காமராஜ் சிலை தெற்கு பக்கம் ,தெங்கம்புதூர் நாள் 19 -10 - 2018  காலை 9  - 10  இருபது வருடங்களுக்கு முன்பு நான் கடுமையாக தோல்வியடைந்த தொழில் இது.மீண்டும் ஒரு சுற்று சுற்றி திரும்பி இந்த இடத்திற்கு வந்து சேர இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன.அப்போது தொழில் பற்றியெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது.இப்போது ஏதேனும் தெரியுமா ? என்று கேட்டால் தெரியாது என்பதே எனது பதிலாக இருக்கும் .தெரிவதால் எல்லாம் சிறப்பாகி விடும் என்றும் இல்லை.அவன் நினைக்க வேண்டும்.அவள் அருள் செய்ய வேண்டும் . பகவானை நம்பி அவனுடைய வேலைக்காரனாக மீண்டும் முயற்சிக்கிறேன்.பகவான் இந்த தொழிலின் உரிமையாளன்.நான் அவனுடைய பணியாள் எங்கும் விற்பதைக் காட்டிலும் குறைவான விலையில் எனக்கு பொருட்களை தர முடியும் என்பதை மட்டுமே உத்திரவாதமாகச் சொல்ல முடியும்.கடன் கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.பழைய அனுபத்திலிருந்து பட்ட வடு அது அருகாமையில் உள்ளோர் இதனையே அழைப்பாக ஏற்று வந்து உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்.நீங்கள் வருக

வசியம் அல்லது செட்யூஸ்

Image
வசியம் அல்லது செட்யூஸ் இந்த பிரபஞ்சத்தில் ஆண் என்கிற உயிரி உள்ளளவும்,பெண் என்கிற விலங்கு உள்ளளவும் ஒருவரையொருவர் வசியம் செய்ய முயன்று கொண்டுதான் இருப்பார்கள்.இப்படி இதனை இல்லாமலாக்குவதற்கான ஒரு மந்திரமும் ஒருவரிடம் கிடையாது .அடிப்படை அன்பும் காதலும், உறவும் கலவியும் இதன் பாற்பட்டவையே.வயதோ நெறிகளோ அதற்கு ஒருபோதும் பொருட்டாவதில்லை. இந்த ஆதாரமான அடிப்படை உணர்ச்சியை கைவிட்டு விட்டது போன்று பாசாங்கு செய்ய முடியுமே தவிர அனைத்து ஆற்றல்களுக்கும் அடிநாதமாக விளங்குவது இது.ஆண் எப்போதும் வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் பெண் ஆணை வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் ஒன்றுமே செய்வதற்கில்லை.அவர் இப்படி செய்யலாமா என்றால் ? அவள் இப்படி செய்யலாமா என்றால் ? அதற்கு விடையேதும் கிடையாது. சக்தியும் சிவனும் மேற்கொண்டிருக்கும் திருவிளையாடல் இது.அனைத்து மாயையும் புகைமூட்டத்துடன் கிளம்புகிற தாய் நதி இது.இந்த ஆதார உணர்ச்சியிலிருந்து விலகும் எவர் ஒருவரும் அவர் தம் அளவில் வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் நாளடைவில் அன்பற்றவர்களாகச் சுருங்கி விடுகிறார்கள்.இதற்கு அர்த்தம் ; காண்போர் அத்தனை ப

முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு

Image
முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு கிறிஸ்தவ மதம் வேறு கிறிஸ்தவக்   கருத்தாக்கம் என்பது வேறு .கிறிஸ்தவ மதம் என்பது கிறிஸ்தவராக மதம் மாறியவர்களை பராமரிக்கும் வேலையை மட்டுமே செய்யக் கூடியது.கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது அனைத்து துறைகளையும் தன்னுடைய கருவிகளால் மேலாண்மை செய்யவும் ,மூழ்கடிக்கவும் திறன் கொண்டது.இந்திய முற்போக்குகள் பெரும்பாலும் அருந்ததி ராய் உட்பட ,ரொமீலா தாப்பர் உட்பட கிறிஸ்தவக் கருத்தாக்கங்களை தங்களுடைய உள்ளடக்கமாகக் கொண்டவர்கள்.இந்திய இடதுசாரிகள்,பகுத்தறிவுவாதிகள் அனைவரும் இந்த கருத்தாக்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களே.அதிலும் குறைந்த பட்ச விசாரணை கூட இல்லாமல் சிக்கியிருப்பவர்கள் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.இங்குள்ள அதிரடி முற்போக்குகள் பலருக்கும் இப்படித்தான் சிக்கியிருக்கிறோம் என்பது கூட விளங்குவதில்லை. பிராங்பர்ட் மார்க்சியர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.உதாரணமாக இந்தியாவில் அஜீஸ் நந்தி , டி.ஆர் .நாகராஜ் போன்றோரைக் குறிப்பிடலாம்.துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இங்கே மார்க்சியர்களாகவே கருதப்படுவதில்லை.அஜீஸ் நந்தி ஓரிடத்தில் வெளிப்படையாகவே இந்த குறையை சுட்டிக் காட்ட