Posts

Showing posts from December, 2017

மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம்

Image
மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம் ஆன்மீக அரசியல் என்கிற ரஜினியின் முதல் பன்ச் டயலாக்கே நன்றாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் இருபது வருடங்களுக்கு பன்ச் டயலாக்கிற்கும் குறைவில்லை.செய்தித்தாள்களில் கேளிக்கைக்கும் குறைவில்லை.தமிழர்கள் பொதுவெளியரசியலிலும் கேளிக்கை குன்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ரஜினிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் தமிழர்கள் கொள்கை அரசியலை ஏற்று கொள்ளவில்லை என்பது ரஜினியின் அரசியல் பிரவேசம் மூலம் வரலாற்று ரீதியாக மீண்டும் நிரூபணம் ஆகிறது.கொள்கை அரசியல் பேசுவோர் தனிநபர் அரசியலை முன்வைப்பவர்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மக்களின் நம்பகத்தன்மையை பெறுவது கடினமாக இருக்கிறது.கொள்கை அரசியல் தங்களை முற்றிலுமாக ஏமாற்றிவிடுகிற அதிகாரம் என்றே மக்கள் கருதுகிறார்கள் . இதற்கான உளவியல்,சமூகவியல் காரணங்கள் எளிமையாக கடந்துவிடக் கூடியவை அல்ல.அதிலிருக்கும் உண்மையின் மூர்க்கத்தன்மை பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது.ரஜினியின் அரசியல் பிரவேசம் அடுத்த காலகட்டத்திற்குள் எம்.ஜி.ஆர்.நுழைவதனை ஒத்த நிகழ்வு.இது தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில், அரசியல் குழப்பம்

தன் வேலை தள்ளிப் போகும் வேலை

Image
தன் வேலை தள்ளிப் போகும் வேலை என்னுடைய ஆறாவது கவிதை தொகுப்பு படிகம் வெளியீடாக வர உள்ளது.அதற்காக கவிதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய கவிதைகளைத் தான் சேகரிக்கிறேன் என்றாலும் இந்த பணி வேறொருவருடைய வேலை போன்று எனக்கு உள்ளது.இதுவரையிலான என்னுடைய கவிதைகள் கை கொண்டு காகிதங்களில் எழுதப்பட்டவை.இந்த தொகுப்பு முழுதுமே இணையத்தில் முகநூலில் என  எழுதியவை. கவிதைகள், சிறு குறிப்புகள்,சிறிய நூல் மதிப்புரைகள் போன்றவற்றை இணையத்திலேயே எழுதிவிடுவதில் எனக்கு எந்த பிரச்சனைகளுமில்லை.உரைநடையை எழுதுவதற்கே தனியே ஒரு மனம் தேவைப்படுகிறது.அது தனிமையால் ஊறிய மனம். அதனை இணையத்தில் எழுதுவதில் எனக்கு பயிற்சி இன்னும் கூட வில்லை.கூடினால் நல்லதுதான் எளிதாக இருக்கும்.இல்லையெனில் உரைநடைகளுக்காக தனியே நேரத்தை ஒதுக்கி எழுத்தாணியை கையில் எடுக்க வேண்டும். என்னுடையவற்றைத் தொகுப்பது உண்மையாகவே சிரமமாக இருக்கிறது."வைத்தியன் பொண்டாட்டி புழுத்துச் செத்தாள்"என்பார்கள்.அது போலவே இதுவும்.நீங்கள் உங்கள் வீட்டு கல்யாணத்திற்கு சந்தைக்கு மரக்கறி வாங்கப் போகவேண்டும் வருகிறீர்களா ? என நள்ளிரவில் கூட அழைத்துப் பார

ஆர்.கே நகர் தேர்தலை தி.மு.க பின்னடைவாகக் கருத வேண்டியதில்லை

Image
ஆர்.கே நகர் தேர்தலை தி.மு.க பின்னடைவாகக் கருத வேண்டியதில்லை. ஆனால்  நிலைப்பாடுகளை உறுதியாக எடுக்க முடியாதவர் ஸ்டாலின் என்கிற மக்கள் கருத்தை தி.மு.க மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.போராட்டங்கள்,கொள்கை நிலைப்பாடுகள் என்று அனைத்தையுமே தி.மு.க சடங்காக மாற்றி வைத்திருக்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள்.இரட்டை நிலைப்பாடுகள் மூலம் மக்களை ஏமாற்றுவதை தி,மு.க மாற்றியமைத்துக் கொள்ளவில்லையானால் வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் ,அனைத்தும் சாதகமாக இருந்தாலும் கூட தி.மு.க தோல்வியடையப்போவது உறுதி.கழிந்த  தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் மீண்டும் அவர்களுக்கு ஏற்படும். நீங்கள் என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறீர்கள் ,நீங்கள் யார் என்பது எதனையும் மக்கள் இப்போது  கணக்கில் கொள்வதில்லை  .நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் ,என்ன செய்வீர்கள் என்பதை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.தி.மு.க சமீபகாலங்களில் மக்களுக்காக பொய்யான ஒரு நிலைப்பாடும் ,மத்தியில் ஏற்பட வேண்டிய சமரசத்திற்காக மாற்று நிலைப்பாடும் என இரட்டை நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.இதனை மக்கள் அறியமாட்டார்கள் என அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்

TTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்கும் மாபெரும் வெற்றி

Image
TTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்கும்  மாபெரும் வெற்றி இவ்வெற்றி சாமானியமானதில்லை.தமிழ் மனம் தனது சுயதன்மையை இந்த வெற்றி மூலம் பிரகடனம் செய்திருக்கிறது என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு இது முக்கியத்துவம் கொண்டதொரு வெற்றி.இந்த தேர்தல் வெற்றி தமிழ் மனோபாவத்திற்கு எதிராக சிந்திக்கும் ,ஏளனம் செய்யும் ஊடகங்கள்,அறிஞர்கள் ,தேசிய அரசியலின் மனோபாவ அடிமைகள் அனைவருக்கும் சிறந்த பாடத்தை ஏற்படுத்தியிருக்கும் வெற்றி. இரண்டு அரசாங்கங்கள் இந்த வெற்றிக்கு எதிராக முழுமையாக  பாடுபட்டிருக்கின்றன.ஊடகங்கள் துணை புரிந்திருக்கின்றன.அரசின் அமைப்புகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன .ஏராளமான சதிவேலைகள். இவை அனைத்தையும் தாண்டி , மக்கள் அனைத்து விதமான அதிகாரத்தின் சதிகளையும் தாண்டி , மக்கள் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள்.இது மக்களுக்கான வெற்றி என்பதுதான் இதன் சிறப்பம்சம் .சதி வேலைகள்,அதிகார பலம் அனைத்தையும் மெளனமாக தங்கள் ஜனநாயக பூர்வமான வாய்ப்பின் மூலம் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் மக்கள். இந்த தேர்தல் முடக்கப்பட்டு மீண்டும் கிடைத்த வாய்ப்பின் மூலம்  மக்கள் சாதித்திருக்கிறார

இன்குலாப் மிகச் சிறந்த மனிதர் ஆனால் இலக்கிய மதிப்பற்றவர்

Image
இன்குலாப் மிகச் சிறந்த மனிதர் ஆனால் இலக்கிய மதிப்பற்றவர் உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்.மிக உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருந்தவர் .வாசகர்களிடமும் ,இலக்கியவாதிகளிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டிலும் அரசியல்வாதிகளிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கே அதிகம். மற்றபடி இன்குலாப்பின் எழுத்துக்கள் உயர்ந்தவொரு மனிதனின் உயரிய நல்லெண்ணங்களே அன்றி அவற்றிற்கு இலக்கிய மதிப்பு எதுவுமே கிடையாது.இலக்கியத்திற்கான விருதுகள் இலக்கியத்திற்காக ,எழுத்துக்களின் இலக்கிய மதிப்பிற்காக வழங்கப்படுதல் வேண்டுமே அல்லாது பிற காரணங்களுக்காக வழங்கப்படுதல் கூடாது. நமது சூழலில் அரசியல்வாதிகளே அல்லது அரசியல் தரப்பினரே பெரும்பாலும் இலக்கியத்தின் பெறுமதியைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.இது நல்லதல்ல.அவர்களிடமிருந்து பறித்து சில நேரங்களின் பெறுமதிகள் இலக்கியத்தின் கரங்களை வந்தடைய போராட வேண்டியிருக்கிறது.இலக்கிய விருதுகளை இலக்கிய வாசகர்களும் , இலக்கியத்தின் தரப்புகளும் முடிவு செய்யவேண்டும்.அது முதற்கொண்டுதான் நாம் ஒரு நாகரீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகும்.நல்ல மனிதர் தாமே இருக்கட்டுமே என்றால்

புயலுக்கும் மழைக்கும் வேற்றுமையில்லை

Image
புயலுக்கும் மழைக்கும் வேற்றுமையில்லை மனித துயரங்களிலும் வேற்றுமையில்லை. துயரங்களை முன்வைத்து பேத அரசியலை முன்னெடுப்பது நல்ல நெறியல்ல.பேதங்களையும் பிளவுகளையும் பொதுமக்கள் ஒருபோதும் முன்னெடுப்பதில்லை.அவர்கள் தங்கள் அன்றாடம் சகஜ நிலைக்குத் திரும்புவதையே காத்திருக்கிறார்கள்.விஷமிகளுக்கு  வேறுவகையான உணவுகள் தேவைப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஏற்பட்ட ஓகி  புயல் பாதிப்புகள் மீனவ சொந்தங்களுக்கு ஏற்படுத்திய துயர் ,உயிரிழப்புகளையும் உள்ளடக்கியது.பொருட்சேதங்களைக் காட்டிலும்  உயிர் சேதமும்,இழப்பும் கொடியது. அத்துடன் அவர்கள் கோடிக்கணக்கான மதிப்புகள் கொண்ட படகுகள் ,வலைகள் ,பிற உபகரணங்கள் என சகலத்தையும் இழந்திருக்கிறார்கள்.பல்முனைப் போராட்டங்களுக்குப்  பிறகு அரசு எந்திரம் அவர்களை முன்னிட்டு லேசாக அசையத் தொடங்கி இருக்கிறது.சற்றே ஆறுதல் தருகிற காரியம் இது. இதுபோலவே நிலப்பகுதியில் ஏற்பட்ட உயிர் சேதமும் ,பொருட்சேதமும் கேலி செய்வதற்கு உரியன அல்ல.நிலமுள்ள விவசாயிகளுக்கு ஏதேனும் ஆறுதலுக்கான நிவாரணங்களேனும் கிடைக்க வாய்ப்புண்டு.இவர்கள் பொருளாதார நிலையில் படகில் மீன்பிடிக்கும் கோடீஸ்வரர்களு

அது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் ?

Image
அது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் ? 1 நானொரு பொறிக்குள் வசிக்கிறேன் அதன் கண்ணிகளை வாயிற் கதவுகளாக ஆக்கிக் கொண்டேன் சரளமாக அதனுள் செல்வதும் வருவதும் என எனக்கது இப்போது பொறியெனப் படவில்லை அதற்கும் எனக்கான பொறியது என்பது மறந்து போயிற்று இன்று பொறிக்குள்ளிருந்து வெளியே வந்து பொறிக்கான பொறியொன்றை வாங்கி பொறிக்குள் திரும்பினேன் அதனை மேஜையாக்கி அதன் மீது சில வார்த்தைகளை வைத்தேன் வெளியில் நின்றொருவன் மதுக்குவளையுடன் பொறிக்குள்ளிருக்கிறாய் தெரியவில்லையா உனக்கு என கத்திக் கொண்டிருந்தான் மேஜையிலிருந்த வார்த்தைகள் இதுவொரு கனவென்பது உனக்கு விளங்கவில்லையா? என்று கேள்வி கேட்கின்றன அவனை நோக்கி 2 அந்தக் குழந்தை நான்கு வழிச் சாலையில் ரத்தத் தடயங்களுடன் முகத்தை வானுக்கு உயர்த்திய வண்ணம் நிலைகுத்திக் கிடக்கிறது சுற்றி இருபக்கமும் வாகனங்கள் சிதறிய வாகனத்தில் பேச்சுமூச்சில்லை தன்மடியில் குழந்தையை கை கொண்டு அரவணைத்து உடல் திருப்பிய பெருஞ்சாலை கேட்கிறது இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறீர்கள் ? குழந்தையின் கண்கள் கடைசியாகக் கண்ட காட்சி அப்படியே அந்த இடத்தில்

கேட்பவரே" கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர் ராஜன் ஆத்தியப்பன்

Image
"கேட்பவரே" கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் [ கேட்பவரே என்னுடைய நான்கு கவிதை நூல்களின் தொகுப்பு  .படிகம் வெளியீடு.பக்கம் 320  விலை - 320 .இந்த கவிதை நூல் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் .மதிப்புரைக்காக கவிஞர் ராஜன் ஆத்தியப்பனுக்கு நன்றி கேட்பவரே ஆசிரியர் - லக்ஷ்மி மணிவண்ணன் படிகம் வெளியீடு 4 -184  தெற்கு தெரு ,மாடத்தட்டு விளை,வில்லுக்குறி அஞ்சல் ,கன்னியாகுமரி மாவட்டம் ,தமிழ்நாடு - 629  180   தொலைபேசி எண் - 98408  48681 ]  அங்கீகரிக்கப்படாத கனவின் வலி நிறைந்த இடமாக படைப்பாளி இருக்கிறான். - சி.மோகன் இசைப் பாடல்களுக்கு ஒரு மாய வல்லமையுண்டு. சொற்களை அதன் அர்த்தத்திலிருந்து வெளியேற்றுகிறது அது என்பதே . எனது பால்யம் இசையை பிரதான சுகஉணர்ச்சியாய் ஏற்றிருந்தது. அதிகாலையில் எங்கள் வீட்டில் ஒலிக்கும் கொழும்பு சர்வதேச வானொலியின் பாடல்களில் அய்யா பல் துலக்கும்போது அல்லது சுய சவரம் செய்யும்போது ஏதேனுமொரு பாடலின் வரியில் எனது விழிப்பு நிகழும்.விழிப்பின் சற்று முன்பிருந்தே பாடல் எனக்குள் துலங்கத் துவங்கியிருக்கும். நான் மனதிலெண்ணிய பா