Posts

Showing posts from November, 2017

மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான்

Image
மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான் மத மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இந்து  அடிப்படைவாதிகளிடம் சகிப்பற்ற கண்ணோட்டம் நிலவுகிறது.மத மாற்றங்களையும் அவர்கள் ஏற்கவில்லை.அதேசமயத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் அவர்கள் பழைய முறைப்படி பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதிசயமான முரண் இது.இந்த குரலை முன்னெடுப்பு செய்கிறவர்கள் இன்னும் பெருவாரியான மக்களை ஏற்கவும் முன்வரவில்லை.மத மாற்றங்களை பொறுத்தவரையில் இரண்டு மூன்று தலைமுறைகள் வரையில் மதம் மாறுகிறவர்கள்தான் நெருக்கடிக்குள்ளாகிறார்கள்.எனவே இது மாறுகிறவர்களின் பிரச்சனையே அன்றி பிறருடைய ஆதங்கங்கள் பொறுத்தமற்றவை.ஆதாயத்திற்காக மாறுகிறார்கள் ,திருமணத்திற்காக மாறுகிறார்கள்,ஏற்ற தாழ்வுகளை சகிக்க இயலாமல் மாறுகிறார்கள் எப்படியிருந்தாலும் அதில் எந்தவிதமான பிரச்சனைகளும் கிடையாது.ஆதாயத்திற்காகத் தான் மாறுவார்கள் .ஒரு விஷயத்தில் ஒரு ஆதாயமும் கிடையாது ; அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது என்றால் மாறுவதுதானே சிறந்த விஷயம் ?.மாறாமல் இருந்து இருந்த இடத்திலேயே புழுத்து சாவதற்கா மனித வாழ்க்கை ? ஒரு கலாச்சாரம் ஒத்துவரவில்லை என நினைத்தால் பிறிதொன்றைத் தேர்வு செய

மார்க்சியம் ஒரு அடிப்படை பாடம்

Image
மார்க்சியம் ஒரு அடிப்படை பாடம் அறிவு தளங்களில் பங்காற்ற விரும்புவோருக்கு மார்க்சியம் ஒரு அடிப்படை பாடமாக இருப்பதே நல்லது.தத்துவங்களைப் பயில விரும்புவோருக்கு  அதுவே சிறந்த தொடக்க கல்வியாக இருக்க முடியும்.அதிலிருந்து பிற தத்துவங்களுடன் உறவு பெற்றவர்களே சிறந்த நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் .  பின்னர் மார்க்சியத்தைக் கைவிட நேரலாம் ,நேர வேண்டும் எனினும் அது மூலபாடமாக உள்நின்று இயங்கும் தன்மையும் சாராம்சமும் கொண்டிருக்கும். விவாதங்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் எத்தகைய தத்துவ முறைகளை பின்பற்றினாலும் சரி,மார்க்சியத்தை தொடக்க கல்வியாகப் பெற்றிருந்தவர் எனில் அவருடன் உரையாடுவது எளிமையானதாக இருக்கிறது.இல்லையெனில்  சிறிது நேரத்திலேயே அவர் தனது குடும்ப நம்பிக்கைகளை பற்றி இறுகப் பேசுபவராக மாற்றமடைந்து விடுகிறார்.அந்த விதத்தில் மார்க்சியம் அதில் விலகுபவர்களுக்கும் கூட பங்களிப்பு செய்யும் தத்துவம். பிற தத்துவங்களுக்கு அத்தகைய வலிமை இல்லையா என்றால் உண்டு.ஆனால் தத்துவங்கள் குடும்ப நம்பிக்கைகளாக வந்து சேருகிற போது மிகுந்த இறுக்கத்தை அடைந்து விடுகிறது.மார்க்சியத்தையும் குடும்ப நம்பிக்கையாக பாவி

அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம்

Image
அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம் எட்டு தலைமுறைக் குடும்பம். எட்டாவது தலைமுறையில் பேரன் பேத்திகளுடன் மரகதம்மாள்.நிறைந்த தேஜஸ் .எட்டு தலைமுறை கடந்து செல்வதென்பது சாதாரணமான காரியமில்லை.மூன்றாவது தலைமுறையே பெரும்பாலும் கசந்து விடும்.நாலில் ஷீணம் உண்டாகும் .முரண்படும்.மன சஞ்சலங்கள் தோன்றும். அதனையெல்லாம் ஒரு குடும்பம் கடந்து செல்வதென்பது தெய்வ காரியமின்றி வேறில்லை.ஐந்து தலைமுறை கடந்தாலே அரசியல் அதிகாரம் ஏற்பட்டு விடும்.முதல் தலைமுறையிலேயே ஏற்படுகிற அரசியல் அதிகாரத்திற்கும் இதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டும்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டு தலைமுறை என்பது கிளைகிளையாக மொத்த சமூகத்திலும் ஊடுருவி இருக்கக் கூடியது . அளத்தங்கரை குடும்பம் இதற்கு உதாரணம்.இந்த குடும்பத்திற்கு கிழக்கு வடக்காக ஏராளமான கிளைகள்.முகிலன் குடியிருப்பு,ஈச்சன் விளை,மணிகெட்டிப்பொட்டல் என்றும் அதிகமாகவும்.இன்று இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.உள்ளூரிலும் மருத்துவர்கள் , வழக்கறிஞர்கள் ,பொறியாளர்கள் என்று பலவாறாக.அளத்தங்கரை குடும்பம் என்றால் இன்றும் ப

பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே வற்புறுத்தக் கூடாது

Image
பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே  வற்புறுத்தக் கூடாது சமத்துவம்,சம உரிமை போன்ற பொது நியதிகளும் மனிதனின் நீண்ட தீவிரமான பயணங்களின் மூலம் கண்டடைந்தவைதாம்.பொது நியதிகளைக் கடைப்பிடிப்பதில் உள்ள நெருக்கடிகளை பிரச்சனைகளை  திறந்த மனதோடும்,நேர்மையுடனும்  விவாதிக்கவேண்டும் .விவாதிப்பது கண்டடைந்த பொது நியதிகளை நோக்கி சில அடிகளை எடுத்து வைக்க உதவ வேண்டுமே அல்லாது பொது நியதிகளை பின்னோக்கி இழுக்கும் நோக்கத்தை அடைப்படையாகக் கொண்டிருத்தல் கூடாது .ஏற்பில் முன்னகர வேண்டும் .அய்யன் அய்யப்பனின் சன்னிதானம் பெண்களும் கலந்து கொள்ளும் வண்ணம் மாற்றம் கொள்ள வேண்டியது காலத்தின் முன் அவசியம்.தவிர்க்கவே இயலாதது. அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில் உள்ள நடைமுறை சிரமங்கள் சிலவற்றை தொடர்ந்து அய்யனின் சன்னிதானத்திற்கு சென்று வருகிறவன் என்கிற வகையில் நெருக்கமாக அறிவேன்.பல்லாண்டுகளாக ஆண்கள் மட்டுமே சென்று கொண்டிப்பதன் காரணமாக ,ஆண்கள் செல்ல மட்டுமே உகந்ததாக அதன் வசதிகள் பழக்கமாகியிருக்கின்றன.சன்னிதானத்தைச் சுற்றியுள்ள வரிசைகள் தற்போது ஆண்கள் செல்வதற்கு மட்டுமே உகந்தவையாக உள்ளன.இதுபோலவே பெண்கள் மட்டுமே செல்லத் த

வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார்

Image
வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார் எங்கள்  ஊர் பகுதிகளை  ஒட்டித்தான் வெகுகாலமாக வசித்து வருகிறேன்.அங்கே இங்கே போய் வந்ததெல்லாம் மிகவும் சொற்ப காலங்கள்தாம்.எவ்வளவோ மகாராஜாக்கள் ஆண்டிருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர்.,கருணாநிதி ,ஜெயலலிதா இப்படி.தமிழ்நாட்டில் ஆளுவோரை மகாராஜாக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.மக்கள் வாக்கிலிருந்து வருகிற மகாராஜாக்கள் .இந்த பகுதிகளை சுற்றி லட்சம் மைல்களுக்கும் அதிகமாக பயணித்திருப்பேன்.வாகனங்களில் வண்டிகளில் என்று பல விதங்களில் .ஏன் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்காக கேரளா எல்லையில் கடற்கரையில் தொடங்கி திருநெல்வேலி எல்லை வரையில் நடந்தும் வந்திருக்கிறோம்.ஆனால் திருடர்களை போன்று போலீஸ்கார்  பொறி வைத்துப் பிடிப்பதை இப்போதுதான் காண்கிறேன்.எல்லோருமே எடப்பாடியை ஒத்த ,பன்னீரை ஒத்த சம வயது தோற்றங்காட்டும் போலீஸ்கார்.முதல் முறையாக மகாராஜா தோரணை அற்ற நடுவயது போலீஸ்கார் தோரணை கொண்ட ஆட்சியாளர்கள் இவர்கள்தாம்.பணிவின் பயங்கரவாதிகள். கேரளத்தின் நிலை வேறு .அதனால் தமிழ்நாட்டின் அரசியல் குறைபாடுடையது என்னும் எண்ணம் எனக்கில்லை.இங்குள்ள சுபாவம் இப்படி.மக்கள் மகாராஜா தோரணை இருந்தால் மட

"சிலேட் " விக்ரமாதித்யன்-70 சிறப்பிதழ்

Image
சிலேட் சிலேட் இந்த இதழ் "விக்ரமாதித்யன் - 70 " சிறப்பிதழாக தயாராகிக் கொண்டிருக்கிறது.விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரைகள் மற்றும் வழக்கம் போல கதைகள்,கவிதைகள்,மொழிபெயர்ப்புகள் என இதழ் அமையும் .படைப்புகளை அனுப்பலாம்.slatepublications @gmail .com .மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்புங்கள். ஒவ்வொரு முறையும் இதழுக்கு செலவாகும் முதலீடுகளை திரும்பப் பெற இயலுவதில்லை.வழக்கமாக சிற்றிதழ்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பிரச்சனைதான் இது.மீண்டும் மீண்டும் இதனை மிகைப்படுத்த விரும்பவில்லை. இதனைய ும் கடந்தே ஒவ்வொரு இதழையும் கொண்டுவர வேண்டியிருக்கிறது .சிற்றிதழ் இயக்கம் என்பது இதனையும் உள்ளடக்கியதுதான் .கால தாமதங்களுக்கு வேறு எதுவும் காரணங்கள் இல்லை. சிலேட் இந்த இதழ் உருவாக்கத்திற்கு உதவி செய்ய விரும்புவோர் உங்கள் பங்களிப்பினை செலுத்த விரும்புவோர் கீழ்கண்ட கணக்கில் செலுத்தி விட்டு ,எங்களுக்கு தகவல் தெரியப்படுத்துங்கள்.நன்றி. LAKSHMI MANIVANNAN.A SB AC NO - 183100050300648 TAMILNAD MERCANTILE BANK LTD IFSC CODE -TMBL0000183 தொடர்பு எண் - 8220386795

கவிதைகள் - 16

Image
கவிதைகள் - 16 ஏரியைக் கடந்து செல்லும் போது ஏரியை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லமாட்டேன் சிறுவயதில் மாடுகளுடன் சேர்ந்து குளித்த ஊருணியை அதில் விட்டுச் செல்கிறேன் என்பது ஏரிக்குத் தெரியும் ஏரி தன்னில் நீந்தத் தொடங்குவதை அப்போது அறியும் அந்த பால்ய வயதின் ஊருணி பிறகு இரண்டுபேரும் முங்கிக் குளிக்கத் தொடங்குகிறார்கள் என்னுடைய நீலத்தில் சின்னஞ்சிறிய குளம் சமுத்திரமாக 2 வழக்கமாக போகும் தெருவில் நான் எதையும் காண்பதில்லை வழக்கமாகப் போகும் தெருவிலிருந்து படியிறங்கி அல்லது படியேறி வழக்கமற்ற தெருவுக்குள் காலடி எடுத்து வைக்க வழக்கமாக போகும் தெருவின் அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுகிறேன் அப்போதும் வழக்கமற்ற தெருவின் காட்சிகளைப் பார்க்கிறேனா ? வழக்கமற்ற பெண் சுட்டிக் காட்டிச் செல்கிறாள் எனக்குள் எப்போதும் கனன்று கொண்டிருக்கும் காதலை அக்கரையில் இருந்து ஊர் பார்க்கப் பிடிக்கிறது எப்போதும் விளிம்பிலிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன் மையத்தை வழக்கமான பேருந்தில் நான் தூங்கிய வண்ணம் பயணிப்பது ஏன் என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கக் கூடு

இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள்

Image
இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள். சில தினங்களுக்கு முன்பு நானும் சூர்யாவும் மண்டைக்காடு பகவதியைப் பார்த்து விட்டு இரணியல் அரண்மனைக்குச் சென்றோம்.மழைச் சாரல். அரண்மனையின் சிதிலம் பேயாக முகத்தில் அறைந்தது.எவ்வளவோ பேர் இது குறித்து பேசியிருக்கிறார்கள்.இவ்வளவு சிதைவடைவதற்கு முன்னரே இதழ்கள் இது பற்றி எழுதியிருக்கின்றன. சுமார் நான்கு கோடி ரூபாய் புனரமைப்பதற்காக ஜெயலலிதா 2014  ல்  நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.இதுவரையில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.மட்டுமல்ல இப்போதைய நிலையில் அதனைப் புனரமைப்பது இயலாது .எல்லாமே முடிந்து கிடக்கிறது இரணியல் அரண்மனை.சிதிலத்தை அகற்றி எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான ஒரு இல்லமாக அதனை மாற்றலாம்.இந்த அரண்மனைக்கு இதுவரையில் எல்லோரும் கூட்டு சேர்ந்து செய்துள்ள  அநீதிக்கு அது பரிகாரமாக அமையும்.ஆனால் யார் செய்வார்கள் இதனை ? கேரளா அரசுக்கு இந்த அரண்மனையின் பேரிலும் ஆரம்பத்தில் ஆர்வம் இருந்தது.இப்போதைய நிலையை காணும்போது தமிழ்நாடு அவர்களுக்கு இதனை விட்டுத் தந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.அவர்கள் நிச்சயமாக பொலிவு படுத்தியிருப்பார