Posts

Showing posts from August, 2017

இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்

Image
முத்தாரம்மன் கோவில்கள் என்பது இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் என்னும் மக்கள் அமைப்பு முத்தாரம்மன் கோவில்களை முன்வைத்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றியது . நானூறு,  ஐநூறு  ஆண்டுகாலப் பழமை கொண்டது இந்த அமைப்பு.பின்னர் தோன்றிய பல சமூக அமைப்புகளிடமும் இந்த அமைப்பின் தாக்கம் உண்டு எனினும் இதைப் போன்று அவற்றிடம் கச்சிதம் குறைவே.இந்து நாடார்கள் சமூகம்,அரசியல் ,பொருளாதாரம் ஆ கியவற்றில் மேம்பட இந்த அமைப்பு பெரிதும் உதவிற்று. முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு தோன்றுவது வரையில் கிராம தெய்வங்கள் ,வாதைகள் வழிபாடு,இசக்கி வழிபாடு போன்றவை தனிக் குடும்பங்களின் செல்வாக்கில் இருந்தவை.பெரும்பாலும் அவை இன்றும் கூட சில விதிவிலக்குகளைத் தவிர்த்து தனிக்குடும்பங்களைச் சார்ந்தே உள்ளன. முதன்முதலாக நாடார்கள் தங்கள் சமூகத்திற்குள் கண்டடைந்த ஜனநாயக பூர்வமான அமைப்பு இந்த முத்தாரம்மன் கோவில்கள்தான்.தனிக்குடும்ப ங்களின் அதிகார ஆதிக்கம்,நிலச்சுவான்தார்கள ின் தான்தோன்றித்தனம் ,திருவிதாங்கூர் மகாராஜாக்களின்  வரி  முகவர்களின் அத்துமீறல்கள் போன்ற தீமைகள் முத்தாரம்மன் க

தோழர் ஜீவா

Image
தோழர் ஜீவா ஆகஸ்ட் - 21 ஜீவானந்தம் பிறந்த தினம்.நமது முந்தைய தலைமுறையின் லட்சிய முகங்களில் ஒன்று ஜீவா.அந்த தலைமுறையின் நற்குணங்களுக்கு அசலான ஒரு சான்று. லட் சிய புருஷர்களில் இருவகையினர் உண்டு.தங்களின் குறிக்கோளுக்கப்பால் ஏதுமில்லை எனக் கருதுபவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் .பிற மார்க்கங்கள் எதற்கும் சிற்றிடம் கூட தங்களிடம் இல்லாதவர்கள்.இவர்களும் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கங்களுக்கு பல தியாகங்களையும் ,பங்களிப்புகளையும் செய்தவர்களாகவே இருப்பார்கள்.மார்க்கங்கள் இறுகி மக்கள் செல்வாக்கிற்கு மார்க்கங்களை நகர்த்துபவர்கள் இவர்கள்தான் பெரும்பாலும்.எல்லா மார்க்கங்களிலும் இவர்களுடைய செல்வாக்கே நமது நாட்டில் அதிகம். இவர்களின் இருப்பை அசையா சொத்தாகக் கொண்டிராத மதங்களோ,நிறுவனங்களோ,கட்சிகளோ இந்தியாவில் கிடையாது. பக்தி மார்க்கத்தின் தொடர்ச்சியில் வருகிற இவர்கள் தங்களின் தரப்பைப் புனிதத் தரப்பாக்கும் வல்லமை படைத்தவர்கள்.தாங்கள் சார்ந்த தரப்பில் சிறு சந்தேகம் கொள்ளவும் இவர்களிடம் பொறுமை கிடையாது.மதத் தலைமைகள் பெரும்பாலும் இவர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. சகல மதங்களும் அபாயத்தன்மை அடைவதற

தமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வழி

Image
தமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வழி இந்த ஆட்சி இவ்வாறே தொடர்வது நல்லதல்ல.இப்போதைய இரு குழுக்களின் இணைவு என்பது பா.ஜ.கவின் இரண்டு துணைக் குழுக்களின் இணைப்புதானே அன்றி ஏற்கனேவே மக்களால் தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.கவிற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.இப்போதைய ஆட்சியாளர்கள் டெல்லியில் இருந்து பெறப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப  ஆடுகிற பொம்மைகள்.பதவி மோகத்தில் தமிழ் நாட்டை மொத்தமாக இவர்கள் வாய்ப்பு இருப்பின் விற்று விடுவார்கள்.இவர்கள் சரண் அடைகிறவர்களின் கால்கள் தற்போது மாறியிருக்கிறதே அன்றி பதவியின் பொருட்டு எதை வேண்டுமாயினும் செய்யத் துணியும் பண்பில் மாற்றமில்லை. பதவி மோகத்தின் வெறியில் மக்களை முட்டாளாக்குகிறார்கள்.இந்த இரண்டு குழுக்களும் பா.ஜ.க வுடன் கட்சியில் இணைத்து கூட தேர்தலில் மக்களை சந்திக்கட்டும்.எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்கிற மடமை மட்டுமே உகந்ததாக இருக்க முடியும்.குறுக்கு வழிகளில் அதிகாரத்தில் யார் நின்றாலும் அது நல்லதல்ல. மாநில அரசாங்கத்தின் அதிகாரிகள் ,மாநில காவல் துறை உட்பட மத்திய அரசாங்கத்தின் சார்பாக இயங்குவது ,கவர்னர் ஆட்சிகளை கழி

நா.முத்துக்குமார்

Image
நா.முத்துக்குமார் - வெட்டியெறிந்த வலி. சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக் கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது எங்களுக்கு சி.மோகனின் அறை,நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறை எல்லாம் நேசிப்பிற்குரிய போக்குவரத்துப் பாதைகள் .நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறையோடு விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்குத்தான் தொடுப்பு அதிகம்.சி.மோகன் அறை எங்கள் அறையைப் போன்றிருந்தது. சி.மோகனின் அறைகள் அனாதைத்தனத்தை கொண்டிருப்பவர்களைக் கொண்டாடுபவை.தனிமையை துதிப்பவை.இலக்கிய ஆர்வமும் ,பன்முகத் தாக்கமும் தேவையென உணரும் தனிமைக்கு சி.மோகனின் அறைகளில் பெரிய முக்கியத்துவம் உண்டு. வசதி,வாய்ப்புகள்,புகழ் என எந்த திறத்தினராக இருந்தாலும் அவர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை இந்த அறையின் பண்பு கொண்டிருந்தது.யாரும் கைவிடப்படுவதில்லை என்கிற கிறிஸ்துவின் வாக்கியம் மோகனின் அறைகளுக்குப் பொருந்தும்.நான் சொல்லக் கூடிய விஷயங்களின் காலம் இரண்டாயிரம்.இந்த அறையோடு என்னுடைய பழக்கம் திருவல்லிகேணியிலிருந்தே தொடங்கிவிட்டது.முத்துக்குமார் அப

தனியார் பயிற்சி மையங்கள் தடை செய்யப்பட வேண்டும்

Image
தனியார் பயிற்சி மையங்கள்  தடை செய்யப்பட வேண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மருத்துவ படிப்பிறகான அகில இந்திய தேர்வில் முதல் பத்து இடங்களை ஆகாஷ் பயிற்சி மையம் பெற்றிருக்கிறது.ஒரே பயிற்சி மையம் இவ்வாறாக அதிக இடங்களை பிடிப்பது மருத்துவக் கவுன்சிலின் நடைமுறைகளில் முறைகேடுகளுக்கான வாய்ப்பு இருப்பதையே உணர்த்துகிறது.நகரம் ,பெருநகரம் சார்ந்த இந்த பயிற்சி மையங்களுக்கும் அகில இந்திய தகுதித் தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கும்  இடையில் உள்ள புரிந்துணர்வு , உயர் படிப்பு விஷயங்களில் உள்ள நம்பகத்தன்மைக்கு இடையூறு செய்கின்றன.கேள்வி தாள்கள் இந்த மையங்களுக்கு முன்னரே  கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு  பாடங்களில் துணை செய்பவையாக மட்டும் இருப்பதில்லை.வினா  தாள்களின் அடைப்படையில் அவர்களுக்கு வருடக் கணக்கில் முதிர்ச்சியூட்டுவதன் வழியாக குறுக்கு வழிமுறைகளை எவ்வாறு மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் திறன் கொள்ளச் செய்கிறது.இத்தகைய குறுக்கு வழிகள் நமது கல்வி முறையை சமநிலை அற்றதாகவும் ஊழல் நிரம்பியதாகவும் மாற்றிவிடும

திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ...

Image
திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ... நீங்கள் நீட் விஷயத்தில் தொழில்முறை வழக்கறிஞராக மட்டுமே பேசுகிறீர்கள் எனில் அது உங்கள் தனிப்பட்ட விஷயம் .பொது மனிதராக பேசுகிறீர்கள் எனில் அது வேறுவிதமானது.இந்தியாவில் உள்ள ஒரு சதமானம் பணக்காரர்களுக்கும் ,99 சதமானம் ஏழைகளுக்கும் இடைப்பட்ட பிரச்சனை இது. நீங்கள் ஒரு சதமானம் பணக்கார்களுக்கு ஆதரவான நியாயங்களை பேசுகிறீர்கள்.அது உங்களுக்கு தொழிலாகப் பணிக்கப்பட்டிருப்பதால் அதில் காலூன்றி நிற்க வேண்டியது உங்கள் வேலை.அதன் பொருட்டு 99 சதமானம் ஏழைகளின் தரப்பு தவறுதலானது என்று சொல்வதற்கு உங்களுக்கு தார்மீக நியாயங்களோ ,அறமோ கிடையாது என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு பொதுவில் பேசுங்கள். நீங்கள் இப்போது நின்று கொண்டிருப்பது சமூக அநீதிகள் தரப்பில் என்பது நினைவில் இருக்கட்டும். நீட் விஷயத்தில் மிகவும் எளிமையான தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன. 1 . மாநில அரசு பள்ளிக்கூடங்களின் கல்வி மேல் படிப்புகளுக்குத் தகுதியற்றதென்று முடிவு செய்கிற அதிகாரத்தை மத்திய அரசாங்கமும் ,நீதி மன்றமும் எந்த வகையில்  பெற்றீர்கள் ? மாநிலங்களோடு இது தொடர்பாக கலந்தாலோசிக்

கவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது

Image
கவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது சமகால கவிதைகள் என்பவை ஒவ்வொரு மொழியிலும் அதன் அளவு மட்டமாகத் திகள்பவை.ஒரு மொழியின் கூரிய முன்னோட்டுப் பாய்ச்சல்கள் முதலில் கவிதையிலேயே நிகழ்கின்றன.கவிதையில் நிகழும் மாற்றங்களே பின்னர் அந்த மொழியில் முப்பது வருட காலத்திற்கு புனைகதைகளில் ,நாவல்களில் வருகிற போக்கைத் தீர்மானம் செய்கின்றன.ஒரு புனைகதை எழுத்தாளன் தனது சமகால கவிதைகள் புரியவில்லை என்று சொல்வானேயாயின் ,அவன் பழைய பிரதிகளை எழுதிக் கொண்டிருக்கிறான் என்பதே பொருள்.கண்ணோட்டங்களின் மூலக் கருப்பொருளை ஒவ்வொரு மொழியிலும் கவிதைகளே முதலில் திறக்கின்றன.அதன் சாரத்தை பிடித்துக் கொள்ளும்  புனைகதையாளன் பின்பு சமகாலத்திற்குள் நுழைகிறான் .கவிதை அறியாமல் எந்த மொழியிலும் அதன் சமகாலத்திற்குள் நுழைவதற்கான கதவுகள் திறப்பதில்லை. தமிழில்  புனைகதைகளில் புத்துணர்வு குன்றியிருப்பதற்குக் காரணம் ; அல்லது புனைகதைகள் பின்தங்குவதற்கு காரணம் இங்குள்ள புனைகதையாளர்கள் பலருக்கு கவிதையோடு பரிச்சயமின்மையே .பிச்சமூர்த்தியிலிருந்து தொடங்கிய நவீன கவிதைகளின் தாக்கம்  புனைகதைகளில் கடந்த முப்பதாண்டுகளை புனைகதைகளில்  தாங்கி

இடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் ?

Image
இடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் ? எந்த ஒன்று இருந்ததோ ,எந்த ஒன்றை ஒட்டு மொத்த சமூகத்தின் கண் முன்பாக இடித்துத் தள்ளினீர்களோ அதனை மீண்டும் கட்டித் தருவதுதானே நியாயம் ? இல்லாததற்கு துடிப்பது எதனைக் காட்டுகிறது ? வரலாற்று காரணிகள் வழியே ,சாதுர்யமான வாதங்களின் மூலமாக ,விலைக்கு வாங்கப்பட்ட எதிர்தரப்புகளின் ஒப்புதலைக் காரணம் காட்டி மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவிலை கட்ட முயற்சிப்பது எந்த வகையான நியாயம் ? இதற்கு நீங்கள் நம்புகிற ராமன் சம்மதிக்கிறானா ? எனக்குத் தெரிந்த ராமன் தந்தையின் வாக்குறுதிக்காக பதினான்கு வருடங்கள் வனவாசம் சென்றவன்.நீதியின் பிம்பம்.நியாயங்களை வளைத்து அநீதி நிறுவப்படுதலை அவன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டான் என்றுதான் நினைக்கிறேன்.இல்லை ஒருவேளை நீங்கள் செயற்கையான வரலாற்றுக் காரணிகளை முன்வைத்தும் ,வாத சாதுர்யங்களை முன்வைத்தும் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றால் ,இந்தியா முழுமைக்கும்; இதுபோன்ற செயற்கையான வரலாற்று காரணங்களும் ,வாத சாதுர்யங்களும் கிடைக்கும் பட்சத்தில், இங்கே இருப்பவற்றை இடித்து விட்டு மறுகட்டிடங்களை கட்டிக் கொள்ளலாம

ஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இடையில்

Image
ஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இடையில் 1 ஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இடையில் சில தூரம் சென்று திரும்பினேன் இப்போது இடைப்பட்ட தூரத்தை இணைத்து மறுமழை பெய்து கொண்டிருக்கிறது இடைப்பட்ட தூரத்தை மேலுமொருமுறை மழை விலக்கிப் பார்க்கிறேன் பெய்யென பெய்கிறது மாமழை இது நேற்றும் இருந்த மழைதான் நாளையும் இருக்கப்போகிற மழைதான் இரண்டு மழைகளுக்கு இடைப்பட்ட தூரத்தையும் இணைத்து பெய்யவிருக்கிற மழையும்தான் ஆனால் இன்று நான் எனது இன்மையின் மீது பெய்து கொண்டிருந்த மழையை நெடுநேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போதும் அது பெய்து கொண்டுதானிருந்தது 2 போராளி தயாராகத் தானிருக்கிறார் கொலையாளியும் தயாராகத் தானிருக்கிறார் போலீஸ்கார் தயாராகத் தானிருக்கிறார் பிரதான் மந்த்ரி தயாராகத் தானிருக்கிறார் நீதிபதிகள் தயார் தான் காரணங்கள்தான் தேவைப்படுகின்றன எல்லோருக்கும் மன நல மருத்துவரும் தயார் தான் நோயாளியும் தயார் தான் நான் எதற்கும் தயாராக இல்லை கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் காரணங்கள் கேட்பீரேல் பின்னர் வருத்தம் கொள்ளாதீர்கள் எழும்பிச் சென்று விடுவேன் 3 மழையில்

சந்தோஷ் நம்பிராஜன் கோணம்

Image
சந்தோஷ் நம்பிராஜன் கோணம் அண்ணாச்சி விக்கிரமாதித்யன் நம்பியின் செல்வம் சந்தோஷ் . பிரேமும் செல்வம்தாம்.இரண்டுமே பகவதியின் அருள் பெற்ற செல்வங்கள். அளப்பெரிய செல் வங்கள்.நாங்கள் உயிர் பெற்றிருப்பதின் அல்லது உயிர் தரித்திருப்பதின் சாட்சியங்கள்.எங்களைக் காட்டிலுமெல்லாம் விளிம்புநிலை என்று சொல்லிக் கொள்ள யார் இருக்கமுடியும் இந்த சமகாலத்தில்? சந்தோஷை குழந்தையாகப் பார்த்து இப்போதும் அவன் குழந்தைதான் எனும் எண்ணம் மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறது.அவன் இப்போது சிறந்த திரைப்பட ஒளிப்பதிவாளாராக விளங்குகிறான் . ஒருமுறை சென்னையில் நம்பியுடன் கூடவே எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு கடையில் சாப்பாட்டுக்குச் சென்றமர நேரம் பிந்திவிட்டது.சந்தோஷ் எப்போதும் உடன் வரும்போது ஏதேனும் பாடல்களை முணுமுணுத்தவாறு ஒரு துள்ளல்நடையில் வருவான்.நாங்கள் அவனது பசியை மறந்திருந்தோம்.பசித்திருக்கும்போதும் அவனது துள்ளல் நடையில் குறையிருக்காது.அதுபோல எங்களுடைய காரியங்களிலும் அவனுக்கு சித்தம் கொள்ளாது.சாப்பாட்டுக்கு உட்கார்ந்த பின்னர்தான் குழந்தையின் பசியைப் பார்க்க சுய உணர்வுக்குத் திரும்பினோம்.இரண்டுபேருக்குமே நான்