Posts

Showing posts from April, 2017

விருதுகளைப் பொறுத்தவரையில் ...

Image
விருதுகளைப் பொறுத்தவரையில் ... பெறுவதைப் பற்றியோ , தவிர்ப்பதைப் பற்றியோ யாருக்கும் பரிந்துரை செய்ய இயலாது.அது நிச்சயமாக பெறுபவரின் சுயமரியாதையுடனும் ,வாழ்வியல் கண்ணோட்டத்துடனும் தொடர்பு கொண்டது.அதே சமயத்தில் பொதுவான மதிப்பீடுகளை அது புறக்கணிக்காமல் இருப்பதே நல்லது.உதாரணமாக வைரமுத்து விருதை விக்ரமாதித்யன் பெற்றால் அதில் குறை சொல்ல ஏதுமில்லை.பசிக்கும் குழந்தை வழிப்பறி செய்து உண்பதற்கு இணையானது அந்த செயல் . முற்றிலுமாக புறக்கணிப்பிற்குள்ளாகி வருகிற அவருக்கு இதைச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் தார்மீகம் இங்கே எவருக்குமே கிடையாது.அதே சமயத்தில் கல்யாண்ஜி,கலா ப்ரியா போன்றோர் பெறும்போது இவர்களில் ஒரு சாக்கடைத் தன்மை தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.ஒருவேளை வைரமுத்து விருதை அசோகமித்திரனோ ,ஞானக்கூத்தனோ பெற்றிருப்பார்களேயாயினும் கூட ஒருகுறையும் ஏற்படாது.இந்த வேறுபாடு என்ன என்பது பற்றி ஒருவர் அறிந்திருப்பாரேயாயின் அவரே விருது பெறுவதில் பொறுப்பேற்பவர் ஆகிறார்.இது முதல் விஷயம். இரண்டாவதாக அந்த விருது நமது முன்னோர்களில் எவர் எவரையெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது என்பது முக்கியம்.அதையேன் நான

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

Image
ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன் புதிதாக எழுத வருபவர்களில் நம்பிக்கையை ஏற்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு.ஏன் இப்படி என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை.புதிய தலைமுறை எழுத்தில் இயங்க வரும்போது எழுத்து இன்னும் அதிக வேகமும்   ,புதுமையும்  அடைய வேண்டாமா ? உண்மையாகவே எனக்கு முந்தைய தலைமுறையினரை வாசிப்பதில் இருக்கிற ஆர்வம் பிந்தைய தலைமுறையினரை வாசிக்கையில் ஏற்படுவதில்லை.முழுமையான ஈடுபாடு என்பது புதியவர்களிடம் வற்றிப் போயிருப்பதுவும் ஒரு காரணம் .முழுமையான ஈடுபாடு இல்லையெனில் கத்தரிக்காய் வியாபாரம் கூட கைவசப்படாது .எழுத்து எப்படி வசப்படும் ? புதியவர்கள் சீசன் வியாபாரம் போல எழுத்தை அணுகுகிறார்களோ என்று தோன்றுகிறது.அப்படியானால் அப்படியணுகுவதற்கு தோதான துறைதானா எழுத்து ? புனைகதைகளை பொறுத்தவரையில் முன்னவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமானது .அதிலிருந்து சில அடிதூரமெனும் முன்னோக்கி நகர நம்மிடம் என்ன இருக்கிறது என்கிற கேள்வி புனைகதை எழுத்தாளனுக்கு இன்றியமையாதது .இந்த நிலையை பின்னணியாகக் கொண்டு யோசிக்கும் போது அரிதாக ஒருசிலர் நம்பிக்கையை ஏற்படுத்துகி

மேல்சாதி பெண்ணுடலை ராணுவமயமாக்கும் - மணிரத்னம்

Image
மேல்சாதி பெண்ணுடலை ராணுவமயமாக்கும் -  மணிரத்னம் ஷீலா ஆப்ரஹாம் ,வருண் என இரு ஆண் பெண் இரட்டைகள்.வருண் மேல்தட்டு பிள்ளைவாள்.தந்தைக்கு எதிர்நிலை என்று மணிரத்னத்தால் முன்வைக்கப் படுகிற ஆண்மை.உண்மையில் தந்தைக்கு எதிர்நிலையா வருண் ? ஒரு காட்சியில் மணிரத்னம் இவ்வாறு ஒரு தகவல் சொல்கிறார்.அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.ஷீலா ஆப்ரஹாம் கிறிஸ்தவப் பெயருடன் முன்வைக்கப்படுகிற இந்திய மேல்சாதி இந்து பெண்ணுடலைத் தாங்கி நிற்கிற பெண்மை .ஆனால் பிராமண முற்போக்குத் தன்மை பொருள் பொதிந்த உடல் இந்த பெண்மை .இந்த இருமைக்குள் இந்திய மேல்சாதி பெண்ணுடலைக் கடத்தி ராணுவ ஆண்மையின் பொருளுக்குள் கொண்டு சேர்ப்பித்தலே மணிரத்னத்தின் காற்று வெளியிடை அரசியல்.மேல்சாதி பெண்ணுடலை தேசிய ராணுவத்தில் உடலாக நிரூபணம் செய்கிறார் மணிரத்னம். பொதுவாகவே கமர்சியல் படங்களின் பொது குணமே ஆண்குறியையும்,பெண்குறியையும் ஏதேனும் பொருளில்  வைத்து அலங்காரம் செய்வதும் ,பின்னர் அதனை டிஸ்பிளே  செய்வதும்தான்.உலகளாவிய வர்த்தகப் படங்களின் பொது விதியிது.ஆனால் பொருளில் ஒரு இயக்குனர் காட்டுகிற முதிர்ச்சியும் நுட்பமும் ,சமகாலத் தன்மையும் அவற்றை வெகு மக்

அண்ணா சாலையில் ஒரு இடத்தில் தானே திடீர் பள்ளம் ?

Image
அண்ணா சாலையில்  ஒரு இடத்தில் தானே திடீர் பள்ளம் ? எங்கள் ஊரில் அப்படியல்ல.இப்படியான ஏராளமான பள்ளங்கள் அடங்கியதுதான் எங்களூர் சாலைகள்.அதனால் அண்ணா சாலையில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் என்னை ஏதும் செய்யவில்லை.திடீர் நோயாளிகள் சில காலம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களை பீற்றிக் கொண்டலைவதை போல சென்னைவாசிகள் நிறைய பொருமுகிறார்களே என்று தோன்றியது. கழிந்த வாரம் பையனுக்கு ஓ பி சி சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது .கிராம நிர்வாக அலுவலகம் ,வருவாய் அலுவலர் அலுவலகம் பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் எல்லாவற்றிற்கும் செல்ல வேண்டும்.எனக்கு இந்த ஜெ,சி.பி எந்திரங்களைக் கண்டால் பெரும் பயம்.யவனிகா ஸ்ரீராமின் ஒரு கவிதையும் எனது பயத்திற்கு காரணமாக இருக்கலாம்.அவர் கவிதை பொக்லைன் எந்திரம் பற்றியது .பொக்லைனைக் காணும் போதெல்லாம் எனக்கு துர்க்கையின் அடிவயிற்றில் ஒரு வேற்று கிரகத்தின் எந்திர யானை சதா ஏறிக் கொண்டிருப்பது போல தோன்றும்.எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்பிற்குள் குறைந்த பட்சம் நாற்பத்தியெட்டு சுடலை மாடசாமிகள் இருப்பார்கள்.எட்டு சுடலையையும் இரண்டு இசக்கியையும் கடக்காமல் ந

சாமிக்கு ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான் அருள் கிடைக்குமா ?

Image
சாமிக்கு ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான் அருள் கிடைக்குமா ? என்று சிலர் அடிக்கடி கேட்கிறார்கள்.நிச்சயமாக அதில் சந்தேகமே கிடையாது.உங்களிடம் சாமிக்குக் கொடுக்கும்படியாக அப்படி என்னதான் விஷேசமாக வைத்திருக்கிறீர்கள் ? போதிய ஞானம் இருக்கிறதா ? இல்லாமை இல்லாத மனம் உண்டா ? வஞ்சம் கீழிறங்கியிருக்கிறதா ? இல்லாமைக்கு இரங்கும் வழி தெரியுமா ? அப்படி என்னதான் பெரிதாக இருக்கிறது உங்களிடம் ? பணம் தவிர்த்து உங்களிடம் ஒன்றுமே இல்லையாயின் பணத்தைத்தான் கொடுத்தாக வேண்டும் வேறு வழி கிடையாது .அம்மை அவ்வையிடம் கவியமுது இருந்தது அதனைக் கொடுத்தாள்.காரைக்கால் அம்மை ஞானத்தை கொடுத்தாள். சாமிக்கு ஆண்டாள் காமத்தைக் கொடுத்தாள் .எதுமே இல்லாதவன் இருப்பதைத் தானே கொடுக்க முடியும் ? உன்னிடம் இருப்பதெல்லாம் பணம் மட்டும்தான்.அப்படியானால் நீ அதனைத் தவிர்த்து வேறு எதனையும் தரயியலாது. ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான் அருள் கிடைக்குமா ? என்று கேட்கிறவனிடம் கொடுப்பதற்கு இடமற்ற வறிய மனம் மட்டுமே இருக்கிறது என்று பொருள் .பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவச குடலங்களோடு பிறந்த கர்ணனிடம் அவனுடைய வள்ளல் தன்மையைக் கேட்டார்.அவன் அவனுடைய வள்ளல