Posts

Showing posts from January, 2017

R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ?

Image
R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ? சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து தடியடி நடத்திய கையோடு R .S .S பேரணி நடத்தியிருக்கிறது.அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் 144 தடை அமலில் இருக்கும் காலத்தில் சென்னையில் இந்த பிரம்மாண்ட பேரணி நடைபெற்றிருப்பதுதான் வியப்பை தருகிறது. வழக்கமாகவே எந்த அரசு அதிகாரத்திற்கு வருகிறதோ அந்த காலங்களில் அந்த அரசுகளின் கடைநிலைக் குழுக்கள் கால்களை கொஞ்சம் அகட்டிவைத்து  வேகமாக ஆட்டி நடப்பது வழக்கம்.இந்த கடைநிலைக் குழுக்கள்தான் பலசமயங்களில் அதிகாரத்தின் மூளையாக ,அதிகாரத்தை இயக்குபவர்களாக இருப்பார்கள்.இது அனைத்து விதமான கட்சிகளுக்கும் பொருந்தும்.தி.மு.க வந்தால் வட்டச் செயலாளரின் வயிறு பெருப்பதை போல .அ .தி.மு.கவில் புரோக்கர்கள் சட்டைக் காலரை கொஞ்சம் தூக்கி விட்டுக் கொண்டு அலைவார்கள்.கேரளாவில் பிரணராயின் கம்யூனிஸ்ட்கள் வந்ததிலிருந்து கட்சி மாபியாக்கள் தலை தூக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாமே வழக்கமான நடபடிகள்தாம் .வழக்கமாக காணும் அனுபவிக்கும் காட்சிகள்தான். ஆனால் பாருங்கள் பா.ஜ.கவின் ஆ

காந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல் ...

Image
காந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல்  ... காந்தியைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்மிடம் நாம் கொண்டுள்ள கற்பனைகள் ,மிகையுணர்ச்சிகள் ,விருப்பங்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றில் கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கான ஒரு வழிமுறை .அது உண்மையை நேர்கொண்டு முன்னடக்க உதவும்.காந்தியை புரிந்து கொள்ளுந்தொறும் அதில் புரிந்து கொள்பவர்களுக்குத் தான் லாபமேயொழிய வேறொன்றும் இல்லை.உண்மைக்கும் நமது விருப்பங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு என்ன என்பது காந்தியை புரிந்து கொள்ளும் காரியம் விளக்கித் தரும்.பொய்யிலிருந்து விடுவிக்கும். உண்மையைப் பற்றி "அவ்வாறே பேசுதல்" என்றே பலரும் அர்த்தம் கொண்டுள்ளோம்.அதுவல்ல.திருவள்ளுவர் உண்மை பற்றி பேசும் போது நீ மறைப்பதும் கூட உண்மைத்தன்மை பெற முடியும் என்று கூறுவதை புரிந்து கொள்ள முடியுமேயானால் , காந்தி உண்மையென்று எதனைக் குறிப்பிடுகிறார் என்பதும் விளங்கும்.உண்மையென்பது ஆழமான அர்த்தம். பல சமயங்களும் உண்மை பற்றி விவாதித்திருக்கின்றன.அதனை ஸ்தூல உருவாக எட்டியவர் காந்தி.முயன்றால் நம்மிலும் நடைமுறையில் எட்டச் செய்து விடுபவரும் காந்திதான். பொய் பேசுதல் என்பது பெரும்

NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம்

Image
 NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி  முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம் நீட் NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி, முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம் நம்மிடம் இல்லாத ஒன்றைச் சுட்டி அதுவே தகுதிக்கான அடிப்படை என்கிற ஒரு தரப்பினர் வரலாறு நெடுகிலும் பயின்று வந்திருக்கிறார்கள்.எப்போதுமே மக்களுக்கு,ஏழைகளுக்கு எதிரான தரப்பினராக இருப்பவர்கள் மேற்கொண்டு வரும் அடிப்படை மனோபாவம் இது.தங்களிடம் அதிகாரத்தை கொண்டு நிறுத்தி அனைத்தையும் அபகரிக்கும் நோக்கம் கொண்ட தரப்பு இது.இந்த மனோபாவம் கொண்டவர்களும் அவர்கள்தம் தரப்பினரும் சமீபகாலங்களில் அதிக அழுத்தம் பெற்று வருவதை அனைத்து துறைகளிலும் பார்க்க முடிகிறது.மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வும் இத்தகைய ஒன்று. இந்தியாவின் மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாட போதனைகள் உள்ளன.குறிப்பாக கேரளாவின் கல்வி முறைக்கும் தமிழ்நாட்டின் கல்வி முறைக்கும் சம்பந்தம் இல்லை.இது போன்றே மாநிலத்திற்கு மாநிலம் கல்வியில் வேறுபாடுகள் அதிகம்.மாநில சுய உரிமைகள் சார்ந்த விஷயங்கள் இவை.ஒரு மாநிலத்திற்குப் பொருந்துகிற நடைமுறைகள் பிறிதொரு மாநில நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை.இதுவ

படிகத்தின் இரண்டு கவிதைத் தொகுதிகள்

Image
படிகத்தின்  இரண்டு  கவிதைத் தொகுதிகள் 1  ' ஈனில் " ஜன்னலுக்கு வெளியில் அது வளர்ந்து கொண்டிருக்கிறது நவீன கவிதைகள் தொகை நூல் - தொகுப்பாசிரியர் : ரோஸ் ஆன்றா குட்டி ரேவதி ,சுகிர்தராணி ,மாலதி மைத்ரி ,மு.சத்யா ,சல்மா ,சுந்தர ராமசாமி ,யவனிகா ஸ்ரீராம்,என்.டி.ராஜ்குமார் ,கைலாஷ் சிவன்,பாலை நிலவன் ,ராணி திலக் ஆகிய பதினோரு தமிழ் கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட தொகை நூல் இந்த "ஈனில் " என்ற ஜன்னலுக்கு வெளியில் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு புதிய கவிதை வாசகனுக்கு இந்த ஒவ்வொரு கவிஞரின் உலகத்தோடும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள உதவும் வண்ணம் இந்த தொகை நூல் உருவாக்கப்பட்டுள்ளது .கவிஞர்களின் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைகள் இந்த தொகை நூலில் இடம்பெற்றுள்ளன.இது இந்த தொகை நூலை சிறப்பு பெற வைக்கிறது.ஒவ்வொரு கவிஞரின் உலகையும் வாசகன் தன்னுள் திறக்க இந்த "ஈனில் " தொகை நூல் உதவும் புதிய கவிதை வாசகனுக்கு "ஈனில்" தொகை நூல் புதிய திறப்பு விலை - ரூ 100 2 'சாயல் எனப்படுவது யாதெனின் " விக்ரமாதித்யன் விக்ரமாதித்யன் தமிழின் மூத்த கவிஞர்.சமூகத்தின

மக்கள் மீது தொடுக்கப்படும் அரசின் யுத்தம்

Image
மக்கள் மீது தொடுக்கப்படும் அரசின் யுத்தம் தன்னெழுச்சி கொண்ட மக்கள் போராட்டங்களின் உளவியல் எளிமையானது அல்ல.தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் நடைபெறவில்லை என்கிற அதிருப்தியின் தரப்புகள் மூடியிருப்பவை.எந்த ஒரு தரப்பையும் நிறைவு செய்வது இத்தகைய போராட்டங்களின் பணி அல்ல.தன்னோடு இணைகிற அத்தனை தரப்புகளையும் தன்னில் கரைக்கவே இத்தகைய போராட்டங்கள் முயற்சிக்கும்.தன்னில் இணைகிற தரப்புகளை கண்காணிப்பதோ   ,பரிசோதனை செய்வதோ இயலாத காரியங்கள் . ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பொறுத்தவரையில் மேட்டிமையின் குரல்கள் பொது உளவியலின் மீது நடத்திய தாக்குதலில் இருந்து அது கிளர்ந்தது.கிளர்ந்ததன் ஒரு காரணம் மட்டுமே தான் இத்தகைய போராட்டங்களுக்கு மூலமாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை.எளிமையில் வைத்து இதனை யூகிப்போர் சொல்லும்  அதிருப்திகளும் ; அரசு முடிவில் செய்வதை ஒப்ப ; தீய சக்திகள் போராட்டத்தில் உள் புகுந்து விட்டன  என்பதை  ஒப்ப ஒரு சார்பானவை. அதே சமயம் இத்தகைய  போராட்டங்களை விளங்கி  ஒரேயொரு கண்ணோட்டம் மட்டும்தான் இருந்தாக வேண்டும்  என எவரையும் நிர்பந்திக்க இயலாது .ஜல்லிக்கட்டைப் பொற

தை தைக் கவிதைகள்

Image
தை தைக் கவிதைகள்   1 கலங்கிக் கிடந்த மன ஆழத்திலிருந்து ஒரு பறவையை உருவியெடுத்தேன் கலங்கியிருக்கும் போதும் அது உள்ளேதானிருந்தது என்பதைத் தெளிய வைத்து அதன் மடியிடுக்கில் எனது ஒரு ஆசையை சொருகி விட்டேன் ஆறாம் இறகென அதனை அது எடுத்துக் கொண்டோடியது கலக்கம் கொஞ்சம் தெளியலாயிற்று காணுமிடம் அத்தனையிலும் ஆசையை சொருகிக் கொண்டே செல்லச் செல்ல ஆசையாய் ஜொலிக்கிறது ஆகாசம் தாவரத்தின் கொண்டையில் சூரியனாக குழந்தையின் கையில் நீர்ச்செம்பாக பிட்டத்தில் சொருகிக் கொண்ட ஆசை பூமலர்,புது மலர் கொத்தாக துள்ளித் தெளிகிறது கலங்கித் தெளிகிறது வைகுண்டத்தில் என் பறவை. பறவைக்கு ஒரு துளி ஆசை என்பதுதான் முழுப் பெயர் 2 கடல் பார்க்க வந்தேன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மலைகள் காண்பதென் தொழில் பழகிக் கொண்டிருக்கிறேன் பார்த்து முடிந்தால் பழகி உணர்ந்தால் பணி முடியும் பறவைகளின் பேச்சு பிடிபட்டுக் கொண்டிருக்கிறது பாதிப் பாதி செய்கையில் கலந்து கொள்கிறோம் காகங்கள் வந்து கைச்சோறு எடுக்கின்றன வேறு என்னென்னவோ செய்கிறேனே எல்லாமிதன் பொருட்டே புணர்தலும் இதன் பொருட்டே புசித்தலும் கவிதை வடித்த

நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி திறப்பு விழா - 05 : 02 : 2017 ஞாயிறு

Image
நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி திறப்பு விழா படிகத்தின் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு அனைவரும் வருக நாள்: 05 : 02 : 2017 ஞாயிறு காலை 9 . 00 மணி முதல் மதியம் 12 . 00 வரை. இடம்: "நிழற்தாங்கல்" படைப்பிற்கான வெளி 7 / 131 E (அரசு நடுநிலைப்பள்ளி அருகில்) பறக்கை - 629601  ,நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்புக்கு: 9362682373 திரு. G . தர்மராஜன் I . P . S கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிழற்தாங்கலை திறந்து வைக்கிறார் குத்துவிளக்கு ஏற்றுதல்: எம். சஹீலா பேகம் பால பிரஜாபதி அடிகளார் அருட்பணி M . C . ராஜன் பாலிகை: எம். பாலின் சகாய ரோஜா ஒருங்கிணைப்பு: லக்ஷ்மி மணிவண்ணன் ஆசிரியர் சிலேட் வரவேற்புரை: என்.சுவாமிநாதன் (தி இந்து தமிழ், நாகர்கோவில்) விக்ரமாதித்யனின் "சாயல் எனப்படுவது யாதெனின்..." கவிதை நூல் வெளியிடுபவர்: ஜெயமோகன் பெற்றுக்கொள்பவர்: சரவணன் சந்திரன் நூல் விமர்சனம்: பாலா கருப்பசாமி ஈனில் (11 கவிஞர்களின் தொகை நூல்) தொகுப்பாசிரியர்: ரோஸ் ஆன்றா வெளியிடுபவர்: கோணங்கி பெற்றுக்கொள்பவர்: கே.என்.ஷாஜி நூல் விமர்சனம்: ல

அமிழ்து போன்றோர் பனம்பழம்

Image
அமிழ்து போன்றோர் பனம்பழம் என்னுடைய கடுமையான காலங்கள் அவ்வப்போது வந்து வந்து செல்பவை.இனி நிம்மதியாகவும் அலப்பில்லாமலும் இருக்கப் போகிறோம் என்று தோன்றும் போது கடுமையான காலங்கள் வந்து முன்னுதிக்கும்.ராத்தங்கும்.அவற்றை எவ்வாறு  எதிர்கொள்கிறேன் என்பது அது கடந்து சென்ற பின்னர் யோசிக்க திகிலாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பது.கடக்கும் போது வலிதான்.இந்த கடுமையான காலங்கள் எல்லோருடைய வாழ்விலும் வரக்கூடியவைதான்.அவரவருக்குத் தக்கபடி.நீங்கள் ஜோதிட சீகாமணிகளை போய் சந்தித்தாலும் வரும் சந்திக்காவிட்டாலும் வரும் .வாழ்வின் சுழற்சியின் நியதி இது தப்பவே முடியாது.சாமியை கும்பிட்டாலும் வரும் கும்பிடாவிட்டாலும் வரும்.தக்கபடி தக்கபடி .இந்த காலங்களில் மெய்வருத்த கூலி கிடைக்கும்.மெய் வருந்த கடவுள் இரங்குவான்.இவனைப் போட்டு படாதபாடு படுத்துகிறோமே என்று அவனுக்கு தோன்றிவிடும்.சலிக்கும்  .திருவள்ளுவர் பெருமான் தெய்வத்தாற் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி  தரும் என்று இதைத்தான் சொல்கிறார்.இதில் "முயற்சி தன் மெய்வருத்த" என்பதே பாடம்.அது விளங்க வேண்டும்.அரசனானாலும் ஆண்டியானாலும் இதில் விதிவிலக்கில்லை.

மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல்

Image
பொங்கல் நல்வாழ்த்துகள் கவிகள்,படைப்பாளிகள் ,வாசகர்கள் ,நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல் ஒரு பண்பாட்டிற்குள்ளிருந்து கொண்டு பிற பண்பாட்டின் அம்சங்களை காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்வதும்   ,பொறுக்கித் தனமானது என்றெல்லாம் தீர்ப்புகள் வழங்குவதும்  , தடை செய்ய முயற்சிப்பதும்  எத்தகைய மனோபாவத்தை அடிப்டையாகக் கொண்டது என்பது விளங்கவில்லை.இந்தியா என்பது பல்வேறு பண்பாடுகளின் சங்கமம் . பிற பண்பாடுகளின் சாரங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ,தங்களுடையவற்றை மட்டுமே பண்பாடாக கருதி பிறவற்றை காட்டுமிராண்டித்தனமானவை என்று கருதுவார்களேயானால் இங்குள்ள ஒவ்வொருவரின் பண்பாட்டையும் இதே அளவுகோலை வைத்து காட்டுமிராண்டித்தனமானவை என்று நிரூபணம் செய்து விட முடியும் .அத்தகையதொரு சூழ்நிலையில் இங்கு எவரேனும் மிஞ்ச முடியுமா என்று தெரியவில்லை. பண்பாட்டு மேட்டிமைத்தனங்கள் எல்லா நிலைகளிலும் அகல வேண்டியவை .அகலட்டும் .அகலும். களையக்  களைய வந்து தொற்றும் கவலைகள் களைந்து மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல் 

ஆக்காட்டி இதழ் - நேர்காணல் - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை வெறுப்பிற்கானவை நேர்காணல்: லஷ்மி மணிவண்ணன். தெ ன் தமிழகத்தின் பனங்கொட்டான் விளை கிராமத்தில் 23- 11-1969-ல் பிறந்த லஷ்மி மணிவண்ணன் வெளிவந்துகொண்டிருக்கும் வலிய இலக்கியச் சிற்றிதழ் ‘சிலேட்’டினது ஆசிரியர். புனைகதை, கவிதை, பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள், களச் செயற்பாடுகள் எனப் பல்வேறு தளங்களில் ஓய்வின்றித் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ‘சுந்தர ராமசாமியில்லாவிட்டால் என் எழுத்தும் பயணமும் வாழ்வும் இத்திசையிலிருந்திருக்காது’ என அறிவிக்கும் லஷ்மி மணிவண்ணன் இலக்கிய வெளியில் நடத்தும் பயணம் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டது. ஓம் சக்தி ஓம் பராசக்தி, வெள்ளைப்பல்லி விவகாரம், 36 A பள்ளம், அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும், வீரலட்சுமி, எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம், சித்திரக்கூடம், குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள், சங்கருக்குக் கதவற்ற வீடு,அப்பாவைப் புனிதப்படுத்துதல் ஆகியவை லஷ்மி மணிவண்ணனது நூல்கள். இந்நேர்காணல் மின்னஞ்சல் வழியே நிகழ்த்தப்பட்டது. – ஷோபாசக்தி 12. 01.2016 ***

சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும்

Image
சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும் பகுதி - 1 மிகக் குறைந்த ஊழியத்தில் ,அதிக அறுவடைகளைப் பெறவேண்டும் என்று எழுத்தாளர்களும் விரும்புவது எல்லா புறங்களிலும் தெளிவாகத் தெரிகிறது . கவிஞர்கள் தங்களின் முதல் தொகுப்புகளுக்கே சிலை அமைக்கப் படவேண்டுமென அரும்பாடு படுகிறார்கள் . பரிசோதனைகள் பேரிலோ , சவாலான காரியங்கள் பேரிலோ ஈடுபடும் நிதானத்தை இழந்து பரிதவிக்கிறார்கள் .கத்தரிக்காய் பயிரிடுதல் தொடங்கி கோழிப்பண்ணைகள் , அணுஉலை நிர்மாணம் வரை இலக்கியத்திலும் சாத்தியம்தாம் என்பதை ஊர்கூடி கண்டுகளிக்கிறது .இவை உலகின் எல்லா ஊர்களிலும் உள்ள விஷயங்களும்தான் .வேடிக்கைகளும்தான் .அவற்றுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்ன?அப்படி வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா? எல்லா பிரமுகர்களையும் இங்கே எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள் .பழைய கிளி ஜோசியகாரர்களைபோல , பிரமுகர்களோடு எடுத்துக்கொண்ட படங்களும் நொடியில் கைத்திரையில் சொடுக்குகின்றன .ஆனால் கலையில் ஒரு கிளி ஜோசியக்காரனின் இடத்தை நோக்கி நகருவதுஎப்படி என்பதைத்தான் கண்டுபிடிக்கத் தெரியவில்லை . இங்கே பலரும் இன்று கலை இலக்கிய அப்துல் கலாம்களாக மாறு

கவிதை எனது கர்மா

Image
கவிதை எனது கர்மா என்னிடம் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்று கூறுகிறவர்கள் உண்டு.அதில் பாதகம் ஏதுமில்லை.கவிதையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் பழகவும் பேசவும் முடியும் என்றெல்லாம் கிடையாது.அப்படி ஒரு அவசியமும் இல்லை.கவிதையில் ஈடுபாடில்லாமல் வாழ முடியாது என்பதும் இல்லை.ஈடுபாடு இன்றி சராசரித்தனத்துடன் நிறைவாகவே வாழ முடியும்.எனக்கு நேரடிப்பழக்கத்தில் இருக்கும் பலர் கலை , கவிதை , இலக்கிய பரிச்சயமற்றவர்கள்தான். கவிதையில் ஈடுபாடு கிடையாது என்பதைப் பெருமைப்பட கூறுகிறவர்களைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கும் . அதற்குக் காரணம் கவிதையில் ஈடுபாடு இல்லையென்பதில் பெருமைப்பட ஏதும் கிடையாது என்பதனால்தான்.என்னிடம் உள்ள நுண்ணுறுப்பு ஒன்று பழுதுபட்டு விட்டது என்பதில் ஒருவருக்கு என்ன பெருமிதம் இருக்கமுடியும்? கண்ணை இழந்து விட்டேன் ,நாசி கெட்டுவிட்டது என்பது பெருமையா ? நாக்கில் சுவை தெரியவில்லை என்றால் நோய் தீவிரப்பட்டு விட்டது என்று அர்த்தம்.ஆறு மாதங்களுக்கொருமுறையேனும் இப்படி என்னிடம் குறுக்கிடுபவர்களை சந்திக்கிறேன்.இன்றும் ஒருவர் ! இந்த கவிதை தெரியாத ,அதன் பேரில் ஈடுபாடில்லாத பெருமிதத்தை