நேருவும் காந்தியும் ஒருவரல்ல

நேருவும் காந்தியும் ஒருவரல்ல

பார்வைகளின் இருவேறு துருவங்களை சுட்டும் பெயர்கள் இவை.இரண்டு பார்வைகளின் அரசியலும் வேறுவேறானவை.துரஷ்டவசமாக இரண்டையுமே ஒன்றைப் போலவே சுதந்திரத்திற்குப் பின்வந்த காங்கிரஸ் பாவித்தது.அவர்களுக்குத் தெரியும் காந்திக்கும் அவர்களின் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது என்பது.நேரு காந்தியத்தை விளங்கி கொண்டாரா என்பதே சந்தேகம்தான்.தொழில்நுட்பம் பற்றிய பார்வைகளில் மயக்கம் கொண்டிருந்தவர் நேரு.தொழில் நுட்பம் அவருக்கு கடவுள்.எம்.எஸ்.சாமிநாதனின் பசுமைப்புரட்சியை விளாறு கொண்டு வீசும் பலர் இங்கு உண்டு.பசுமைப்புரட்சியின் உதயம்தான் நேரு.ரஷ்யாவின் மீதான சாய்வு தற்சயலானதல்ல.காந்தியிடமிருந்து விலகிச் சென்ற இடத்திலிருந்து நேரு கைபற்றிக் கொண்ட இடம் அது.ஆனால் சே முன்பாக நம்பிக்கையுடன் அமர்ந்திருக்க நேருவுக்கு உதவியது காந்தியம்தான்.காலம் எவ்வளவோ அழிப்பாங்கதைகளால் ஆனது .நேரு காந்தி உறவும் அத்தைகையது.காந்தியின் இருப்பு என்பதே நேருவிற்கு எதிரானதுதான்.இப்போதைய இந்தியாவின் முன்மாதிரி நேருதான். இந்திரா காந்தி,மோடி எல்லாமே நேருவின் தொடர்கண்ணிகள்.இந்த வேறுபாட்டை அறிய இயலாமல் அரசியல் கருத்துக்களை உருட்டுதலும் விவாதித்தலும் அர்த்தமற்றவை.

காந்தியைப் பற்றி காஸ்கிரஸ்காரர்கள் ஏன் பேசுகிறார்கள் ? என்பதே பலசமயங்களில் விளங்குவதில்லை.எங்கள் குடும்பத்திலும் ஒரு தாத்தா இருந்தார் என்பதற்காகவா ? காங்கிரசின் முகவர்களாகிய இந்திய கம்யூனிஸ்டுகள் இடுக்கண்  வரும்போது மட்டுமே காந்தியைத்
தேடுபவர்கள்.மற்றபடி தூய காந்தி விரோதிகள் இந்திய கம்யூனிஸ்டுகள் .அவர்களை நேருவிற்குப் பிறந்தவர்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்கும்.

நேருவின் ஜிப்பாவில் அமர்ந்திருக்கும் ரோஜா குழந்தைகளை ஏமாற்றும் திறன்படைத்தது.அது ஒரு பெரிய நாடகத்தின் முதற்காட்சி.இன்றுவரையில் ராகுல் நடிக்கும் நாடகத்தின் இயக்குனர் நேருதான்.ராகுல் குடிசைகளுக்குள்ளிருந்து திரும்பும்போது நேருவின் ரோஜா சிரிக்கும் சப்தம் என் காதில் விழும் 

Comments

  1. Any movement should have a thought system.Political parties can act with its locus in the thought system or we say the ideology. Unfortunately Nehru failed or was reluctant to make Gandhian ideology as the nucleus of his party. Heart of heart he had no faith in Gandhian ideology, since he was always carried by western ideologies. That is the reason why congress party is functioning without any fulcrum.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"