சுடலைமாடன் முன்பாக வெளியிட்டோம்.

படிகம் 7 நவீன கவிதைக்கான இதழ்
வெளியிடப்பட்டது.முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் நண்பர் பிலிஸ்த்து தமிழ் பெற்றுக் கொண்டார். பிலிஸ்த்து தமிழ் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து அறிமுகமாகி தொடர்ந்து உடன் வருபவர்.பழக இனிமையானவர்.குரு ராஜதுரை ,படிகம் இதழ் ஆசிரியர் உடனிருக்க இதழை
சுடலைமாடன் முன்பாக வெளியிட்டோம்.
இவ்விதழ் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.இதழில் எழுதியுள்ள ஒவ்வொருவரின் கவிதை பற்றியும் எழுதவே விருப்பம்.சமயம் வாய்க்கும் போது எழுதுவேன்.இதழை வெளியிட அழைத்தமைக்கு நன்றி.இசக்கியம்மனின் அருள் அத்தனைப் படைப்பாளிகளுக்கும் இருக்கட்டும் .இதழ் நல்ல சூழ்நிலையை தமிழுக்கு மேலும் மேலும் உருவாகட்டும்.வாழ்த்துக்கள் .
ஜெ.பிரான்சிஸ் கிருபா,பாலை நிலவன்,கைலாஷ் சிவன் உட்பட என்னுடைய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.இதழினை விலைகொடுத்து வாங்கி படித்துப் பாருங்கள் .நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருப்பினும்,சார்ந்த துறையில் நிபுணராக இருப்பினும் கூட கவிதை உங்கள் ஆளுமையில் ஒட்டவில்லையெனின் அவ்விடம் வெற்றிடமே.அதனை வேறு எதனைக் கொண்டும் ஈடுகட்டவே இயலாது.நானும் கவிதையெழுதுகிறவனாக இருப்பதால் இதனைச் சொல்கிறேன் என்று அலட்சியம் காட்டாதீர்கள்.கவிதையை இழந்தால் நீங்கள் இழந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும் . அதற்காக கவிதை பழகுங்கள்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"