"படிகம்" நவீன கவிதைக்கான இதழ் - 7

"படிகம்"  நவீன கவிதைக்கான  இதழ் - 7

மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் ஏழு இதழ்கள் வெளிவந்து விட்டன.கவிதை தொடர்பான பாதிப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சூழலில் இந்த இதழ் ஏற்படுத்தியிருக்கிறது.புதியவர்கள் பலர் அறிமுகம் ஆகிறார்கள்.கவிஞர்கள் தங்கள் கவிதா அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.கவிதை பேரில் தற்போது ஏற்பட்டுள்ள கவனத்திற்கு படிகம் இதழின் பங்களிப்பும் காரணம். தேவதச்சன்,விக்ரமாதித்யன் ,ஜெயமோகன்  உட்பட பலரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.விக்ரமாதித்யன் இந்த இதழில் இருந்து கௌரவ ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பது சிறந்த காரியம்.அவர் இவ்விதழில் தொடர்ந்து  நகுலன்,தேவதேவன் போன்ற சிறந்த கவிகளை அறிமுகம் செய்து எழுதும் பக்கங்கள் குறிப்பிடற்குரியவை.கவிஞர்களுக்கான புதிய தளமாக "படிகம்" பொலிவு கொண்டிருக்கிறது.இதன் பொருட்டு படிகம் இதழின் ஆசிரியர் ரோஸ் ஆன்றா போற்றுதலுக்குரியவர்.அவர் குறைவில்லா அனைத்து செல்வங்களும் வளமும் பெற்று  மேன்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எது ஒரு சமூகத்தில் குறைவுபடுகிறதோ அதனை செய்யத் துணிதலே காரியம். அவருக்கு வாசகர்கள் ஒத்துழைப்பு செய்யுங்கள்.ஒத்துழைப்பு என்பது விலகி நின்று வேடிக்கை பார்த்தல் அல்ல.அருங்காரியங்களை துணிந்து செய்ய முன்வருவோர் தளரக்கூடாது.சூழல் அவர்களைத் தளர விடக் கூடாது.இதுபோல துணிய இப்போது இளைஞர்கள் குறைவு என்னும் ஓர்மை நம் மனதில் இருத்தல் வேண்டும்.

இந்த இதழில் கவிஞர் பாலை நிலவனின் கவிதைகள் பொக்கிஷம்.ஜெ.பிரான்சிஸ் கிருபா விஷேசம்.

"படிகம் " சமகால கவியோட்டம்.வாழ்த்துக்கள் பங்கேற்றுள்ள கவிகள்  அனைவருக்கும்.

தொடர்பு முகவரி ;
"படிகம்"
நவீன கவிதைக்கான இதழ்
4/184 தெற்குத் தெரு ,மாடத்தட்டு விளை,
வில்லுக்குறி - 629180
கன்னியாகுமரி மாவட்டம் ,
தமிழ் நாடு

தொடர்பு எண் - 98408 48681
மின்னஞ்சல் - padigampublications@gmail .com

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"